சென்னை : சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நாளை துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில், 4வது சர்வதேச பிடேரேட்டிங் செஸ்
போட்டி சென்னை மாத்தூரில் உள்ள ஸ்வாதி மகாலில் நடக்கிறது. இந்தப் போட்டி,
நாளை முதல் 24ம் தேதி வரை நடைபெறும். 10 சுற்றுகள் கொண்ட இப்போட்டிக்கு
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஸ்பான்சர் செய்கிறது.
இதில், கலந்து கொள்ள, வீரர்கள் போட்டி நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் 98844 24747 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.