Engineering colleges requested to Hike fees | பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகம்,சம்பளசெலவு அதிகரிப்பு: கல்வி கட்டணம் உயருகிறது ?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகம்,சம்பளசெலவு அதிகரிப்பு: கல்வி கட்டணம் உயருகிறது ?

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 18, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணம் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கான கட்டணத்தை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2.2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில், 1.7 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டின் கீழ், "கவுன்சிலிங்' மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டு கல்விக் கட்டணமாக, 32 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 62 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

தனியார் கல்லூரிகள் மனு:நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையிலான குழு, இக்கட்டணத்தை நிர்ணயித்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆறாவது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலை, நிர்வாகச் செலவு, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதால் ஏற்படும் செலவு உள்ளிட்ட, பல்வேறு செலவுகளை ஈடுகட்டும் வகையில், தற்போதைய கட்டணம் இல்லை என்றும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதைப்போல் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாலசுப்ரமணியம் குழுவிடம், கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, 250க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் மனு அளித்துள்ளன. அதில், தற்போதுள்ள கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளதாகத் தனியார் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள கட்டணம்:கேரளாவில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில், 50 சதவீதத்தை அரசும், மீதியுள்ள 50 சதவீதத்தை கல்லூரி நிர்வாகங்களும் நிரப்புகின்றன.அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 50 சதவீத இடங்களில், 25 சதவீத இடங்களுக்கான கட்டணம், 35 ஆயிரம் ரூபாயாகவும், மீதியுள்ள 25 சதவீத இடங்களுக்கான கட்டணம், 60 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. மாணவரின் பெற்றோர் வருமானத்தின் அடிப்படையில், இப்படி இரு வகையாக அரசு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு:நிர்வாக ஒதுக்கீடான 50 சதவீதத்தில், 15 சதவீத இடங்களை, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக் கொள்ள, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ், 5 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது. எனினும், கேரள அரசு, கூடுதலாக 10 சதவீத இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்தில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ், 5 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்ப அனுமதி உள்ளது.கல்விக் கட்டணத்தை உயர்த்துவதுடன், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டையும் உயர்த்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என, தனியார் கல்லூரிகள் எதிர்பார்க்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unnai pol oruvan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201210:38:31 IST Report Abuse
unnai pol oruvan already most of the college's getting more donation from student for admission through management...ten y so fake drama to increase government seat rate...ivanuga aasaiku alavey illa pola!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை