DISTRICT NEWS | பம்ப்செட் மூலம் குடிநீர் திருடுவோருக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பம்ப்செட் மூலம் குடிநீர் திருடுவோருக்கு எச்சரிக்கை

Added : ஜூன் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி:"அபிராமம் பகுதியில் பம்ப்செட் மூலம் குடிநீர் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பேரூராட்சி செயல்அலுவலர் ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: அபிராமம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தொட்டி அமைத்து, பம்ப்செட் மூலம் கூடுதல் குடிநீர் திருடி வருகின்றனர். இதனால் பலருக்கு குடிநீர் கிடைக்கவில்லை, என புகார் வந்த வண்ணம் உள்ளது.

பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அகத்தாரிருப்பு வார்டுகளில் தான், அதிகளவு பம்ப்செட் மூலம் குடிநீர், திருடுவதாக தெரியவந்துள்ளது. பம்ப்செட் மூலம் கூடுதலாக குடிநீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பம்ப்செட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை