DISTRICT NEWS | பார்'களில் நள்ளிரவு வரை விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்| Dinamalar

தமிழ்நாடு

பார்'களில் நள்ளிரவு வரை விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : ஜூன் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி:கமுதி பகுதியில் உள்ள டாஸ்மாக் "பார்'களில் நள்ளிரவு வரை கூடுதல் விலைக்கு "சரக்கு'கள் கிடைக்கின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கமுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் "பார்'கள் உள்ளன. காலை 10 முதல் இரவு 10 மணி வரை தான் "பார்'கள் செயல்பட வேண்டும். இதை மீறி காலை 8.30 முதல் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. "சைடு டிஷ்' தயார் செய்கிறோம் எனக்கூறி காலை 8.30க்கே "பார்' திறந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள "சரக்கு'களை அநியாய நிலைக்கு விற்கின்றனர். இதை கண்டிக்கவேண்டிய டாஸ்மாக் அதிகாரிகளும், மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

எந்த நேரத்திலும் சரக்குகள் கிடைப்பது குடிமகன்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் கூடுதல் விலை அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையும், வெளியில் விற்பதை விட நான்கு மடங்கு அதிகம். உதாரணத்திற்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ரூ.6க்கு விற்கின்றனர். "பார்'களை பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் நடத்துவதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.பயத்தை விலக்கி நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். "பவரை' காட்ட போலீசாருக்கு, காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி., உத்தரவிடுவதோடு, தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை