DISTRICT NEWS | சுத்தம் செய்யப்படாத செவரக்கோட்டை தொட்டியிலிருந்து தண்ணீர் வினியோகம் | Dinamalar

தமிழ்நாடு

சுத்தம் செய்யப்படாத செவரக்கோட்டை தொட்டியிலிருந்து தண்ணீர் வினியோகம்

Added : ஜூன் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கல்லல்:கல்லல் ஒன்றியம் செவரகோட்டையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். செவரகோட்டை,பட்டணம்பட்டியில் 30 ஆண்டுகளுக்கு முன் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு ள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.செவரகோட்டைதொட்டி கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தொட்டி அருகே தான் விளையாடுகின்றனர்.தொட்டி எப்போது விழும் என தெரியாத நிலையில் சுற்றி கம்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத தொட்டியில் தண்ணீர் ஏற்றி வழங்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.பட்டணம்பட்டியில் உள்ளமேல்நிலை நீர்தேக்க தொட்டியும் இதே நிலையில் தான் காணப்படுகிறது.தொட்டியை சுத்தம் செய்து தொற்று நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை