DISTRICT NEWS | புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாடு குறித்து அதிருப்தி | Dinamalar
Advertisement
புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாடு குறித்து அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் புது பஸ் ஸ்டாண்ட் பிரச்னையை கண்டு கொள்ளாமல், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம் காட்டுவதால், ஸ்ரீவி., மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி,ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் தற்போதய அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்கிறது. தினம் ஏராளமான பஸ்கள் வந்து செல்வதால் ,ராஜாஜிரோடு, ஆத்துக்கடை தெரு கடும் போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கிறது. பஸ் ஸ்டாண்ட் நுழையும் இடம் எதிரே, அரசு ஆஸ்பத்திரி வரும் நோயாளிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் நிலை தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவி.,யில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை ரோட்டில் மீனாட்சிபுரம் விலக்கு அருகே, சிவகாசி ரோட்டில் செங்குளம் கண்மாயில் இடம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின், இது வரை எவ்வித முயற்சி இன்றி கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது புதுபஸ்ஸ்டாண்ட்.

இதன் பிரச்னை கூட, கடந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சியினரின் முக்கிய பிரசாரமாக இருந்தது. ஆனால் இதன்பின் நடந்த நகராட்சி தேர்தலில், இதன் பிரச்னையை ஏனோ கட்சியினர் கண்டுகெள்ளவிலை. சட்டசபை தேர்தலின் போது முக்கிய பிரசாரமாக கருதப்பட்ட இதை , எம்.எல்.ஏ.,வாக பொன்னுபாண்டியன் தேர்வாகியும் , எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தற்போதய நகராட்சி தலைவரும், நகரின் போக்குவரத்து நெருக்கடியை நன்கு உணர்ந்தும் , இது தெடர்பான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலரை திருப்திபடுத்தவே, புதுபஸ் ஸ்டாண்ட் பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் பிரச்னையில் நகர்வாதிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தும், ஒரு சிலரது சுயநலத்துக்காக, இதை எம்.எல்.ஏ., நகராட்சி தலைவரும் கண்டு கொள்ளாதது, இவர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிருப்தியிலிருந்து மீள, இதன் மீது கவனம் கொண்டு, போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில், புது பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை செயல்படுத்திட எம்.எல்.ஏ.,மற்றும் நகராட்சி தலைவர் முன்வர வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்