DISTRICT NEWS | 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; தண்ணீருக்காக தினம் ரூ.30 செலவு | Dinamalar

தமிழ்நாடு

20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; தண்ணீருக்காக தினம் ரூ.30 செலவு

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 18, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருத்தங்கல் நகராட்சி 7,8 மற்றும் 13வது வார்டுகளில் 3000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு கருணாநிதி காலனி, முனீஸ்வரன் காலனி, காந்திநகர், ராதாகிருஷ்ணன் காலனி, சத்யா நகர் பகுதிகள் உள்ளன. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், குடிநீர், உப்பு தண்ணீருக்காக குடியிருப்போர் சிரமம் அடைகின்றனர். திருத்தங்கல் நகராட்சிக்கு மானூர் கூட்டு குடிநீர், ஆனைக்குட்டம் அணை நீர் தவிர ,ஆங்காங்கே உள்ள ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. இருப்பினும் சில மாதமாக 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் குடிநீரை குடம், பானைகளில் பிடித்து , நாள்கணக்கில் பயன்படுத்துகின்றனர். இதன்பின்னும் மக்கள் தினம் ஒரு குடம் ரூ.2க்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். குடிநீரைத்தான் விலை கொடுத்து வாங்குகின்றனர் என்றால் ,வீட்டு புழக்கத்திற்கான நீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கே.கே.நகர், முனீஸ்வரன் காலனி உட்பட்ட 7வது வார்டில், மக்களின் பயன்பாட்டிற்காக 5000 லிட்டர் கொண்ட நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகே ஆழ்துளை குழாய் உள்ளது. ஆழ்துளை குழாயில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் இருப்பு பைப்பை சரியாக பொருத்ததால், தண்ணீரானது மேல்நிலைத்தொட்டிக்கு செல்லாமல் வீணாகிறது. இதனால் மேல்நிலைத்தொட்டிக்கு பல மாதங்களாக தண்ணீர் ஏற்ற முடிவில்லை. நகராட்சியில் முறையிட்டாலும் குழாயை பழுதினை சரி செய்ய முன் வரவில்லை. சத்யாநகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை தீர்க்க 2011-2012ம் ஆண்டில், மாணிக்க தாகூர் எம்.பி., தொகுதி நிதியில், இரண்டு இடங்களில் சிறு மின்விசை பம்புகள், தலா ரூ.1 லட்சம் செலவில் ஆழ்துளை குழாய், ஆயிரம் லிட்டர் கொண்ட பிளாஸ்டிக் தொட்டி அமைத்து ,பணிகள் முடிந்து 4 மாதங்கள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல் முடங்கியுள்ளன. திட்டம் ஏன் பயன்பாட்டிற்கு வரவில்லை என விசாரித்தால், மின் மீட்டர் சப்ளை இல்லாததால் செயல்படுத்த முடியவில்லை என ,காரணம் கூறுகின்றனர்.

இது தொடர்பாக குடியிருப்போரின் குமுறல்கள் சில இதோ:வெள்ளைச்சாமி (சத்யா நகர்): 25 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீருக்கே தினம் ரூ.30 வரை செலவிட வேண்டியுள்ளது. பள்ளிக்கூடம் அருகே உள்ள தொட்டி நீரை அந்த பகுதி மக்கள் மட்டும்தான்நீருக்கு செலவு செய்யும் பணமாவது மிச்சமாகும்.செந்தில்வேல்: பள்ளிகூடம் அருகே உள்ள மேல்நிலை தொட்டி மோட்டார் பழுதடைந்ததால் மக்கள் சிரமப்படுகின்றனர். புதிய தொட்டி அமைத்து அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஊதியத்தின் பாதியை தண்ணீருக்கு செலவிடுகிறோம். ஆனந்த நாயகி (கவுன்சிலர்): எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் தலா ஒரு லட்சம் செலவில் ஆழ்துளை குழாய்கள் அமைத்தனர்.

அதில் 400 அடிக்கு போர் போட்டும், தண்ணீர் இல்லை. 5 மாதமக பயன்பாட்டிற்கு வரமலே உள்ளது. ரூ. 2லட்சம் செலவு செய்தும் வீணாகி விட்டது. பெரியகுளம், செங்குளம் கண்மாயில் போர் அமைத்திருந்தால் ,தண்ணீர் கிடைத்திருக்கும். 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், 7,8வது வார்டுகளை, தனி ஜோன் ஆக பிரிக்க வேண்டும் என கோரி வருகிறேன். நகராட்சியில் தனி ஜோன் பிரிக்க முடியாது என்கின்றனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க, நகராட்சியில் தொடர்ந்து முறையிட்டு வருகிறேன்.போனில் சொல்லுங்கள் நேரில் வருகிறோம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளேபொதுமக்களே ,உங்கள் பகுதியில் தீராத பிரச்னைகள் இருக்கிறதா? எத்தனை முறை புகார் கூறியும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் எட்டி பார்க்க வில்லையா? "தினமலர்' நிருபர் குழு உங்கள் பிரச் னைகளை படம் பிடித்து காட்ட தயாராக இருக்கிறது. 04562 - 268 501க்கு காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் போன் செய்யுங்கள்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
19-ஜூன்-201219:31:29 IST Report Abuse
Cheenu Meenu சென்னை மாநகர் தவிர மற்ற எங்கும் தினசரி தண்ணீர் விநியோகம் கிடையாது. சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி போன்ற இடங்களில் ஆண்டுக்கணக்கில் குடிநீர் வரி வசூல் செய்தும் பத்து பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. சாதனை பட்டியலில் இவைகள் சேர்க்கப்படுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை