traffic jam in cengi : does four way road will put | செஞ்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் : நான்குவழி சாலை அமைக்கப்படுமா? | Dinamalar
Advertisement
செஞ்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் : நான்குவழி சாலை அமைக்கப்படுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

செஞ்சி : செஞ்சியில் திண்டிவனம், திருவண்ணாமலை சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இந்த சாலையை நான்கு வழி சாலையாக விரிவு படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை பெங்களூரூ செல்வதற்கும் பிரதான வழியாக செஞ்சி உள்ளது. வேலூரில் இருந்து விழுப்புரம், திருச்சி, கடலூருக்கும் செஞ்சி வழியாக செல்வதே நேர்வழி.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருமளவு பெருகி விட்டன. வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் செஞ்சியில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளன. அத்துடன் செஞ்சி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனம், திருவண்ணாமலை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுகிறது. 100 அடிக்கும் அகலமான திருவண்ணாமலை சாலையின் பெரும்பகுதியை கடைக்காரர்கள் பொருட்களை கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். லோடு இல்லாமல் ஓய்வெடுக்கும் லாரிகள், மினி லாரிகள், மாட்டு வண்டிகளை ரோட்டை ஒட்டி நிறுத்தி அடாவடி செய்கின்றனர். இப்பகுதியில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அடுத்த இரண்டு நாட்களில் பயனற்று போனது. இந்த வழியாக ரோந்து வரும் போலீசார் ரோட்டோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையோ, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்துவதிலோ அக்கறை காட்டுவதில்லை. ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள், சினிமா தியேட்டர் மற்றும் ஏராளமான திருமண மண்டபங்கள் திருவண்ணாமலை சாலையில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலையில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 2010ம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் கூட்ரோட்டில் இருந்து செஞ்சி கோட்டை வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி, சாலையின் மையத்தில் ஹைமாஸ் விளக்கு அமைப்பது என 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்போது இருந்ததை விட தற்போது கூடுதலாக நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா நகரமான செஞ்சியை அழகு படுத்த வேண்டியதும் அவசியமான ஒன்றாக உள்ளது. சுற்றுலாத்துறையிடம் கிடப்பில் உள்ள திட்டத்தை விரிவு படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக உள்ள திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை சாலையை நான்கு வழி சாலையாக விரிவு படுத்தி இதன் மையத்தில் தடுப்பு கட்டை அமைக்க வேண்டும். அத்துடன் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நடைபாதையை ஏற்படுத்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்