red tree wood cheased in rice mill | அரிசி ஆலையில் பதுக்கிய ரூ.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல் : ஒருவர் கைது: லாரி, கார் பறிமுதல் | Dinamalar
Advertisement
அரிசி ஆலையில் பதுக்கிய ரூ.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல் : ஒருவர் கைது: லாரி, கார் பறிமுதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருத்தணி : அரிசி ஆலையில், ரகசிய அறைகள், நெல் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி, ரேணிகுண்டா பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் செம்மரக் கட்டைகள் வாகனங்களில் கடத்தப்பட்டு வருகின்றன. திருத்தணி பகுதி வழியாக கடத்தல் நடப்பதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், வேலூர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு லாரி மற்றும் கார் மூலம் கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அரிசி ஆலையில் சோதனை
மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் மீணா உத்தரவின் பேரில், திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி ஆசிரியர் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து வேகமாக வந்த கார், நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் அரிசி ஆலைக்குள் நுழைந்தது. சந்தேகமடைந்த ஏ.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் போலீசார், அரிசி ஆலைக்குள் நுழைந்து காரை சோதனை செய்தனர். காருக்குள், செம்மரக் கட்டைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அரிசி ஆலையில் சோதனை செய்தனர். தோண்டத் தோண்ட செம்மரக் கட்டைகள் அங்கு, 6 ரகசிய அறைகள், நெல் மூட்டைகள் மற்றும் உமி மூட்டைகளிலும் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார், 30 பேர் உதவியுடன், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, செம்மரக் கட்டைகளை, 5 மணி நேரம் போராடி எடுத்தனர். மொத்தம், 100 டன் செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய். இந்த செம்மரக் கட்டைகள் ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த, 6 மாதமாக கடத்தி வந்து அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டவையாகும். இக்கட்டைகள் வேலூர் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு லாரியின் மூலம் கடத்தப்பட இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, செம்மரக் கட்டைகள் கடத்துவதற்குப் பயன்படுத்திய, லாரி மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். செம்மரக் கட்டைகள் பதுக்கிவைக்கத் துணையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தனபால், 45 என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, அரிசி ஆலையின் உரிமையாளர்கள் திருத்தணி எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த தெய்வசிகாமணி, 45, நித்தியானந்தம், 40 ஆகிய அண்ணன், தம்பிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

அப்போது ரேஷன் அரிசி இப்போது செம்மரக் கட்டை: ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இதே அரிசி ஆலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ரேஷன் அரிசி மூட்டைகளை இங்கே கொண்டு வந்து "பாலிஷ்' செய்து லாரி மூலம் பெங்களூருக்கு கடத்தி வந்தனர். இதனைக் கண்டுபிடித்த வருவாய்த் துறை அதிகாரிகள், அரிசி ஆலைக்கு சீல் வைத்ததுடன், உரிமையாளர்களான தெய்வசிகாமணி, அவரது தம்பி நித்தியானந்தம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தற்போது, அரிசிக்கு பதிலாக செம்மரக் கட்டைகள் கடந்த ஓராண்டாக கடத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016