Kalam unlikely to contest, conveys reluctance to Advani | எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட கலாம் மறுப்பு: பா.ஜ., அணிக்கு மேலும் பின்னடைவு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (119)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என, அப்துல் கலாம் கூறி விட்டதால், என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் ஏற்பட்டு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திரிசங்கு நிலையில் விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வலுவான வேட்பாளர் என்பதால், இவரை எதிர்த்து நிற்கப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்தலாம் என, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதால், அது பற்றியும் எதிர்க்கட்சிகள் பரிசீலித்தன. கலாமுக்கு பரவலான ஆதரவு இருந்தாலும் கூட, வெற்றி பெறுவதற்கு தேவையான ஓட்டு எண்ணிக்கை நிச்சயமில்லாமல் இருந்தது. இதனால், அவர் போட்டியில் இறங்குவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் நீடித்தது. பல்வேறு கட்சியின் தலைவர்களும் போட்டியிடும்படி, அப்துல் கலாமுக்கு நெருக்கடி அளித்து வந்தனர். குறிப்பாக நேற்று முன்தினம் ஆர்.எஸ். எஸ்., தலைவர் மோகன் பகவத் கூட, கலாம் பெயரை குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்தார். அத்வானி பேச்சு: இந்நிலையில், நேற்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பலமுறை அப்துல் கலாமிடம் பேசியும் பார்த்தார். தனது தூதராக சுரேந்திர குல்கர்னியையும் அனுப்பி வைத்து பேசினர். கோல்கட்டாவில் இருந்து மம்தா பானர்ஜியும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, நேற்று மாலை 4 மணியளவில் டில்லியில் ஒரு அறிக்கையை அப்துல் கலாம் வெளியிட்டார். அதில், "என் மீது அன்பும், மதிப்பும் வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல தலைவர்களும் வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அன்பை மதிக்கிறேன். ஆனாலும், தற்போது எழுந்துள்ள சூழ்நிலைகள் அனைத்தையும், முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. மேலும், ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமென்று எப்போதுமே நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆகவே, தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்க நான் விரும்பவில்லை' என்று தெரிவித்திருந்தார். ஓட்டுகள் இல்லை: கலாமை போட்டியிட வைத்து விடலாம் என, எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் கூட, அவர் அதற்கு உடன்படாததற்கு போதுமான ஓட்டுகள் இல்லை என்பதே காரணம். போட்டியில் இருந்து அப்துல்

கலாம் ஒதுங்கிக் கொண்டு விட்டதால், தே. ஜ., கூட்டணியின் பாடு தான் ரொம்பவும் திண்டாட்டமாகி விட்டது. பா.ஜ.,வின் உயர்மட்டக்குழுவும் மூன்று முறை கூடி ஆலோசித்தது. தே.ஜ., கூட்டணி இரண்டு முறை கூடி ஆலோசித்துப் பார்த்தது. ஆனாலும், முடிவெடுக்க முடியாமல் திணறி வந்தது.
கருத்து வேறுபாடு: இந்த கூட்டணிக்குள் ஆரம்பம் முதலே ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. தீவிர கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பா.ஜ.,வுக்கு அடுத்த முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆரம்பம் முதலே, கலாமை ஏற்கவில்லை. பிரணாபிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, உறுதியாக இருந்தது. சிரோன்மணி அகாலிதளமும் பிரணாபுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணத்திலேயே இருந்தது. சிவசேனாவோ அப்துல் கலாம் தான் வேட்பாளர் என, தீர்மானமாக இருந்தது. இப்படி ஆளாளுக்கு ஒருவரை ஆதரித்துக் கொண்டிருந்ததால், பா.ஜ.,வால் முடிவு எடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை உருவானது. கவலை: காங்கிரசுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தக் கூட முடியாத அளவுக்கு தே.ஜ., கூட்டணி பலவீனமாக உள்ளதே என்ற நெருக்கடி ஒரு பக்கம். குறைந்தபட்சம் அடையாளத்திற்காக மட்டுமாவது, ஒருவரை நிறுத்தி போட்டியிடச் செய்யும் அளவுக்காவது இருக்க வேண்டுமே என்ற கவலை இன்னொரு பக்கம் என, பா.ஜ.,வை வாட்ட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு தீவிரமாகி வரும் வேளையில், மிக வலுவான மூன்று மாநில முதல்வர்களும் காங்கிரசை துணிச்சலாக எதிர்க்கும் சூழ்நிலையில், அதைக் கூட பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போகிறதே என்ற பா.ஜ.,வின் உள்வட்டாரங்கள் கவலையில் உள்ளன. கைவிட முடியுமா?: இதுதவிர, பிரணாப்

Advertisement

முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தே.ஜ., கூட்டணியை விரிவாக்கம் செய்ய முடியும். ஆனால், பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டுமென, தற்போது கைவசம் உள்ள ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது. ஆகவே, கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஜெயலலிதா, நவீன் பட்நாயக் போன்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே இருக்கும் நிதிஷ்குமார் போன்றவர்களை கைவிட முடியுமா என்ற குழப்பமும் பா.ஜ.,வை ஆட்டிப் படைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், சங்மாவை ஆதரிப்பது அல்லது பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என, இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தே.ஜ., கூட்டணிக்கு உள்ளது. இதுதவிர மூன்றாவதாக ஒன்றும் உள்ளது. சங்மாவை பா.ஜ., மட்டும் ஆதரிப்பது, கூட்டணியின் மற்ற கட்சிகள் எல்லாம் அவரவருக்கு பிடித்தவர்களை ஆதரிப்பது. அனேகமாக இந்த மூன்றாவது யோசனையே முடிவாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கலாம் முடிவு சரியானது': காங்.,: "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முடிவு சரியானதே என, காங்., கட்சி தெரிவித்து உள்ளது. டில்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், புகழ் பெற்ற சிறந்த மனிதர். அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். பெருமதிப்புக்கு உரிய அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என, முடிவெடுத்துள்ளார். அது பொருத்தமான முடிவே. அதனால், பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க, மம்தா பானர்ஜி முன்வர வேண்டும். "மம்தா தன் சகோதரி போன்றவர்' எனக் கூறியுள்ள பிரணாப், ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, தனிப்பட்ட முறையில் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (119)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN - chennai,இந்தியா
20-ஜூன்-201200:24:48 IST Report Abuse
RAJAN பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும், அப்படியென்ன பதவி ஆசை. அவர் பேரில் உள்ள குற்றசாட்டுக்களை எல்லாம் இல்லை என நிருபிக்கட்டும். சாதாரண பொது மக்களுக்கு எப்போதும் விலைவாசி உயர்வை நிதி அமைச்சராக இருந்து பரிசளிதவருக்கு குடியரசு தலைவர் பதவி என கட்சிகள் நினைப்பது ஒரு வருந்தத்தக்கதாகும். பொதுமக்களே, நீங்கள் இன்னுமா தூங்குகிறீர்கள்? இதெல்லாம் அந்த தாத்தாவுடன் சேர்ந்ததால் வந்தது தான். தாத்தா எந்தத் தமிழனையும் (தன் குடும்பத்தாரை தவிர) வாழ விடமாட்டார். ஒரு நல்ல தமிழன் ஐயா அப்துல் கலாம் வருவதற்கு ஏன் ஒரு தமிழ் அரசியல்வாதி கூட முன் மொழியவில்லை. ஐயா அப்துல் கலாம் காலில் விழுந்தாவது அவரை குடியரசு தலைவர் பதவிக்கு நிற்க வைத்து வெற்றி பெறசெய்ய வேண்டும். ஐயா அப்துல் கலாம் அவர்களே, இந்த தேசத்தை காப்பாற்றுங்கள். உங்கள் கனவு 20 /20 உங்களால் தான் வெற்றி பெற வைக்க முடியும், அதற்கு நீங்கள் எங்கள் குடியரசு தலைவராக வேண்டும். இந்த நாட்டையும் மக்களையும் வழி நடத்த வேண்டும். உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Shah Jahan - Colombo,இலங்கை
19-ஜூன்-201216:23:02 IST Report Abuse
Shah Jahan Kalam It is a good decision to stay away from those who wanted to make him a scapegoat. A contest for Kalam where the negative result is on the board is not at all advisable. A defeat will tarnish his tail career. It is not the youth and face book members are the voters but dirty politicians. Anti Congress segment is using him as a tool for their benefit. 
Rate this:
Share this comment
Cancel
cr natarajan - coimbatore,இந்தியா
19-ஜூன்-201216:20:08 IST Report Abuse
cr natarajan சுதந்திர பறவை கூண்டில் அடைபது
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
19-ஜூன்-201215:26:54 IST Report Abuse
Tamilar Neethi கலாம் ஜூன் 7 சென்னை வந்திருந்த போது ராஜ்பவன் இலிருந்து SBOA பள்ளிகூட நிகழ்சிக்கு சென்றார். அவர் வந்த வழி எல்லாம் வாகனம் . வளைந்து நெளிந்து வாகனத்துடன் வாகனமாய் கலாம் வாகனம் வந்து சேர்த்தது. SBOA நிகழ்ச்சி முடிந்த பிறகும் கடின பயணம் மேற்கொண்டு திரும்பினார். நேற்று ஜெயா 1006 திருமண நிகழ்சிக்கு சென்றார். இவர் வரும் முன் சாலையை போகுவரத்து போலீசார் வழித்து வைத்திருந்தார்கள். இந்த நாடு எப்படி அரசியல்வாதிகள் கைகளில் மாட்டிகொண்டு தவிக்கிறது. சட்டம் ஏற்றும் பாராளுமன்றம் / சட்டசபை , கண்கானிக்கும் நீதித்துறை , திட்டம் செயல்படுத்தும் அமைச்சர்கள்/அதிகாரிகள் இவை எல்லாம் குடியரசு தலைவர் கீழ். இப்படி இருந்தும் ஒரு முன்னாள் ஜனாதிபதி பயணம் ஒரு இந்நாள் CM ஆல் கண்காணிக்க படுகிறது. இதில் இருவரும் Z வகை பாதுகாப்பு வளயத்தில் வருபவர்கள். இப்படி அரசை நடத்துபவர்கள் ஆட்டம் போடும் இந்த கால கட்டத்தில் இந்த நாட்டை சீர் பண்ண முடியாது என்று நினைத்து ஒதுங்கி விட்டார்??? இல்லை பரவி வரும் லஞ்சம், ஆடம்பரத்திற்கு சின்னம் ஆகிப்போன ராஷ்ட்ரபதி பவன் பக்கம் செல்ல மனசு இடம் கொடுக்கவில்லை போலும் ??? இல்லை நேரம் பணம் விரயம் ஆகும் கூத்து பட்டறை ஆகிப்போன பாரளுமன்றம் கண்டு மனது ஒடிந்து இவர்கள் வாக்கில் ஜனாதிபதி ஆக மனம் இடம் கொடுக்கவில்லை போலும் ??? இல்லை சுரங்க ஊழல் , 2G ஊழல்என்று தேசம் நாறி போன வெளயில் இதை சுத்தம் செய்ய முடியாது என்று மலைத்து ஒதுங்க்குகிறார்??? இல்லை இந்த ஜனாதிபதி போட்டி மூலம் தான் இமேஜை BJP பெற்று ஒரு முஸ்லிம் முத்திரை பெற நினைக்கும் நிலை கண்டு மறுக்கிறார்?? இல்லை ஆசை துறந்து, அடைபடுவது பிடிக்காமல் அக்கினி சிறகு சுதத்திரமாய் பறக்க இந்த அரசியல் முத்திரை பதிக்க வெறுத்து ??? எது எப்படியோ எல்லோரும் விரும்பும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் இப்படி வேண்டாம் என்பது தேச நலம் கருதியா இல்லை போது வாழ்க்கை லிருந்து விலகும் நோக்கிலா ??? பாமரன் கேள்வி பல ??? அன்னா முதல் மக்கள், சில அரசியல் கட்சிகள் வெறுக்கும் ஒருவர்தான் ஜனாதிபதி ஆகுவர் ??? இனி ராஷ்ட்ரபதி பவன் என்பது மக்கள் வெறுப்பின் ஒரு இருப்பிடம் ஆகிவிடுமோ??? இல்லை சுதந்திரம் வாங்கிய பின் காந்தி காங்கிரேசை கலைத்துவிட சொன்னதுபோல இந்த அரசியல்வாதிகள் தேர்வு முறை ஜனாதிபதி தேர்தல் முறை வேண்டாம் மக்கள் நேரடி தேர்தல் வேண்டும் என்று மறுத்துவிட்டார் ???? தேடி வரும் பதவி வேண்டாம் என்று ஒருவர் . பதவி வேண்டும் என்று தேடி தேடி அரசியல்வாதிகளுக்கு பூ செண்டு கொடுக்கும் பதவி வெறியர்கள்??? இதிலும் ஒரு மாதிரி வேண்டும் என்று நிராகரித்து விட்டார் ??? வெல்வது அதில் வரும் பதவி,,, ஒருவர் தோற்பது அதில் வரும் வெறுப்பு,,, இதில் நாட்டின் உயர் பதவி சிக்கி விடகூடாது என்று ஒரு முடிவு எடுத்துவிட்டார் ??? வென்றும் வெறுப்பினை ஏற்க மறுத்து எல்லோரும் விருப்பினால் அரியணை அமரும் மக்கள் நாயகர்??? பிறர் மனம் நோகாமல் சேவை தொடர அடிஎடுத்து வைக்க பறக்க துடிக்கும் அக்கினி விஞ்ஞானி... நீர் நிலம், காற்று, வாழும் மக்கள் பாதுகாப்பு விருப்பும் அரசியலுக்கு அப்பால் பட்ட அற்புத மனிதர்...பதவி இவரால் பெருமை படும் ... இவர் வகித்த பதவி என்று சொல்ல படும் இது இவர் ஏற்படுத்திய நிரந்தர முத்திரை ...இவருக்கு முன்னும் பின்னும் ரப்பர் ஸ்டாப்ம் என்று ஒரு பதவி -அதற்கு இப்படி போட்டி அதனால் இவர் ஒதுங்கி ???
Rate this:
Share this comment
Cancel
A.MANIKANDAN.IRUGUR - coimbatore,இந்தியா
19-ஜூன்-201215:22:23 IST Report Abuse
A.MANIKANDAN.IRUGUR நாட்டின் பாதுகாப்பு பற்றி முழுமையாக அறிந்த திரு. கலாம் அவர்களே ஜனாதிபதியாக தகுதியானவர்.நாட்டிற்கு தாயாக இருப்பவர் அவரே, மற்றவரெல்லம் நாட்டிற்கு பேயாக இருப்பவர் .
Rate this:
Share this comment
Cancel
chandramouli - chennai,இந்தியா
19-ஜூன்-201215:13:50 IST Report Abuse
chandramouli ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்ற நிலையை கொண்டு வந்தவர் இந்திராகாந்தி. திரு ஜெயில்சிங், இந்திராகாந்தி என் தலைவர் அவர் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னால் அதை செய்வது என் கடமை என்றார். அவரை ஜனாதிபதி ஆக்கி அந்த பதவி என் வீட்டு வேலைகாரனுக்கு உண்டான பதவி என நிரூபித்தார். அதனை அவரது மருமகள் தொடர்கிறார். சோனியாவை பொறுத்தவரை 2014 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் காங்கிரஸ் பெரும்பான்மை பெற mp களை விலைக்கு வாங்க காலாவகாசம் தேவைப்படும். மேலும் காங்கிரஸ்சுக்கு தான் முதல் வாய்ப்பு என சிக்னல் கொடுத்து mp கள் ஆதரிக்க வழி செயவும் தான் சொல்வதை கேட்கவும் ஒரு தலை தேவை அது கிடைத்து விட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி பீடத்திற்கு வெகு தொலைவில் இருக்க வேண்டும். அதற்க்கு அக்கட்சி 30 அல்லது 40 சீட் மட்டுமே பெற வேண்டும். இது நம் கையில் தான் உள்ளது. கலாமை வேண்டாம் என கூறியவர்கள் நம்மை ஆள வேண்டாம் என நாம் முடிவு எடுப்போம்
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
19-ஜூன்-201214:59:07 IST Report Abuse
MOHAMED GANI அப்துல் கலாம் அவர்கள் முடிவு சரியே. அவர் மாதிரியான தகுதியுள்ளவர் போட்டியின்றிதான் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இல்லையேல் ஒதுங்கிக்கொண்டு இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-201214:54:58 IST Report Abuse
g.s,rajan Abdul kalam should become prime minister,the rubber stamp post been excellently handled by the"PUPPET" Prathiba Patil.India is now devasted by All India Indira Congress one should not simply say Congress,the corruptive political party should be thrown out of crown in the next election,then only India could be saved. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-201214:43:12 IST Report Abuse
Appavi Tamilan அண்டங்காக்கா குயிலாக [ மாநில அரசியல் ] ஆசைப்படலாம்...மயிலாக [ தேசிய அரசியல் ] ஆசைப்படலாமா? ஜெயலலிதாவுக்கு 150 + தொகுதிகள் கிடைத்தவுடன் ஏதோ பாராளுமன்ற தேர்தலில் 200 சீட்கள் கிடைத்த நினைப்பு வந்துவிட்டது..போதாதற்கு அவரின் அடிவருடிகள் வேறு அவ்வப்போது அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்று உசுப்பேத்தினர்...அதை சோதித்து பார்ப்பதற்காகத்தான் எங்கோ கிடந்த சங்மாவை ஆதரித்தார்...ஆனால் அவருக்கு ஆதரவு இல்லாமல் அய்யா.கலாமுக்கு ஆதரவு அதிகமானவுடன் ஜெயலலிதாவுக்கு அடங்கி விட்டது...அதனால்தான் ஜெயலலிதா இப்போது அண்மையில் எந்த கருத்தும் கூறவில்லை...ஒரு வேலை பிஜேபி சங்மாவை ஆதரித்தாலும் அவர் தோற்று விடுவார்...ஆகவே..குயிலே அதிகம்...மயிலுக்கெல்லாம் ஒரு தராதரம் வேண்டும்...தராதரம் ..தராதரம்
Rate this:
Share this comment
Cancel
Premalatha Net Pal - manama,பஹ்ரைன்
19-ஜூன்-201214:33:30 IST Report Abuse
Premalatha Net Pal நாட்டின் தலைவரை ஏன் மக்கள் தேர்வு செய்ய கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.