Cong snubs Digvijay for remarks against Mamata | பத்திரிகைகளுக்கோ, "டிவி'க்கோ பேட்டி தரக்கூடாது: திக்விஜய்க்கு காங்கிரஸ் தடை| Dinamalar
Advertisement
பத்திரிகைகளுக்கோ, "டிவி'க்கோ பேட்டி தரக்கூடாது: திக்விஜய்க்கு காங்கிரஸ் தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

"" மம்தா பானர்ஜி குறித்து திக்விஜய் சிங் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து,'' என, காங்கிரஸ் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சி சேனல்களுக்கோ பேட்டி தரக்கூடாது என்றும் திக்விஜய்சிங்கிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறில்லை: காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, பக்குவமில்லாமல் செயல்படுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நடத்திய ஆலோசனை விவரங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது, முலாயம் சிங் யாதவுடன் இணைந்து, தன்னிச்சையாக மூன்று பேரின் பெயர்களை அறிவித்தது போன்ற விஷயங்களில், தவறாக செயல்பட்டார். எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை உள்ளது. தற்போதுள்ள அமீத் அன்சாரியை, மீண்டும் துணை ஜனாதிபதியாக்க வேண்டும். அவர் துணை ஜனாதிபதியாக சிறப்பாக செயல்படுவதால், மீண்டும் அவரை தேர்ந்தெடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை' என, கூறியிருந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திரிணமுல் காங்., நீடித்து வரும் நிலையில், திக்விஜய் சிங் தெரிவித்த இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,"மம்தா பானர்ஜி குறித்து, திக்விஜய் சிங் தெரிவித்தது, அவரது சொந்த கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில், கருத்துக்களை தெரிவிப்பதற்கு, அவருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையல்ல: அத்துடன் பத்திரிகைகளுக்கோ, சேனல்களுக்கோ எந்தவொரு பேட்டியும் அளிக்க கூடாது என்றும் திக்விஜய்சிங்கிற்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. திக்விஜய் சிங், கட்சி மேலிடத்தின் கண்டனத்துக்கு ஆளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே பாட்லா என்கவுன்டர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, கட்சி மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளானார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (38)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tms - valasiramani.thiruchirappalli.tamilnadu,இந்தியா
19-ஜூன்-201217:17:45 IST Report Abuse
tms இவருக்கு வாய் கொஞ்சம் நீளம் தான். எதையும் யாருடனும் கலந்து பேசாமல் பேட்டி கொடுத்து """பெரிய ஆள்"""ஆகத் துடிக்கும் குருகிய மனம் கொண்ட ஒரு சிறிய மனிதர் கையாலாகாத காங்கிரஸ் இவரை அவ்வப்போது ஒரு சிறிய கைக்குட்டையாகப் பயன்படுத்தி வருவதால் வந்த வினைஆகையால் இனியும் தேவை இல்லை இந்தக் கைக்குட்டை என்று கசக்கித் தூக்கி எறிய வேண்டும் செய்யுமா?? காங்கிரஸ் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜூன்-201216:50:02 IST Report Abuse
Nallavan Nallavan உபி தேர்தலுக்கு முன்னதாக இவ்வாறு தடை செய்திருந்தால் இன்னும் நாலு சீட்டுக்கள் காங்கிரசுக்கு அதிகம் கிடைத்திருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - Chennai,இந்தியா
19-ஜூன்-201215:29:39 IST Report Abuse
TAMILAN இவர் தான் காங்கிரசின் சகுனி. காங்கிரசை அழிப்பதற்காகவே கட்சியில் இருந்து கொண்டு நாட்டுக்கு சேவை செய்கிறார் போல இருக்கு. எப்படியாவது இத்துடன் காங்கிரசை ஒழித்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கூடவே இருக்கிறார் குழி பறிப்பதற்காக
Rate this:
Share this comment
Cancel
jeeva - pondicherry,இந்தியா
19-ஜூன்-201212:57:12 IST Report Abuse
jeeva திக் விஜய் சிங்க் & கபில் சிபில் & சல்மான் குர்ஷித்,மனிஷ், சோனியா இவர்களை நீக்கினால் காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கு. கே ஜீவா pondicherry
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
19-ஜூன்-201211:38:29 IST Report Abuse
kurumbu மாப்பு வச்சிட்டாங்கே ஆப்பு. எதுக்கு பா இந்த மானம்கெட்ட பொழப்பு. தமிழ்நாட்டில் ஒரு தாத்தா என்ன சொல்றார்னு அவருக்கே தெரியாம உலருவார் அப்புறம் நான் அப்படி கூறவில்லை இப்படி கூறினேன் நு சொல்லுவார்.அது மாதிரிதான் இந்த ரப்பர் வாய் கொண்ட இந்த திக் திக் விஜய் சிங் ..........வாழ்க பாரதம் .........
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
19-ஜூன்-201211:08:22 IST Report Abuse
saravanan மம்தா கூட்டணியை விட்டு சென்று விடக்கூடாது... எப்படியாவது 5 வருடம் பூர்த்தி செய்து விடவேண்டும் என்ற சோனியாவின் நாடகம்தான் இது.... ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு இதே திக் விஜய், இதே மம்தாவை பற்றி கமென்ட் அடிப்பார் பாருங்கள்............ அப்போது யாரும் தடை சொல்ல மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
19-ஜூன்-201210:12:15 IST Report Abuse
Ganesh G யாருக்கு சந்தோஷமோ இல்லையோ எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படியே அவர கட்சிய விட்டு நீக்கிடுங்க. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201210:11:51 IST Report Abuse
Sriram V Finally Congress did a right thing. It should have done it much earlier than they would have got few more seats in UP. Diggy is not any political ethics. He should be kicked out of Congress.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
19-ஜூன்-201209:17:59 IST Report Abuse
N.Purushothaman காங்கிரஸ் கட்சியில் காமடி பண்றதுக்கு கூட சுதந்திரம் கிடையாதா?????? உள்கட்சி ஜனநாயகம் இல்லாத காங்கிரஸ் கட்சியிலிருந்து இவர் வெளியேற வேண்டும் ....இவரோட நகைச்சுவை இல்லாமல் எப்படி பொழுது போகும்.......
Rate this:
Share this comment
Cancel
Subramanian Thandi - Madurai,இந்தியா
19-ஜூன்-201208:55:42 IST Report Abuse
Subramanian Thandi யாருடைய கேள்விக்கு யார் பதில் சொல்லனுமுன்னே தெரியல இந்த காங்கிரஸ் காரணங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்