1006 couples enter into wedlock in Jaya's presence | இல்லறத்தை வீணாக்காதீர்: மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை - Jayalalitha | Dinamalar
Advertisement
இல்லறத்தை வீணாக்காதீர்: மணமக்களுக்கு முதல்வர் ஜெ., அறிவுரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""சவால்களை துணிச்சலுடன் சந்திக்கும் நபரைத் தான் சமூகம் வரவேற்கும்,'' என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவேற்காடு கோவிலில் 1,006 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் செய்து வைத்து அவர் பேசியதாவது:

இல்லறம் இனிக்க...: இல்லறம் என்பது இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின் முழுமையான இணைப்பு. இந்த இல்லற வாழ்வு இனிமையாக இருக்க, சலனமில்லாத, விலாசமான மனம் வேண்டும். பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இன்று பல குடும்பங்களில், அர்த்தமில்லா சண்டைகள் தான் அதிகம். சண்டை போடுபவர்கள் அடுத்தவரின் எண்ணத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால், சச்சரவுக்கே இடமில்லாமல் போய்விடும்.

குட்டிக்கதை: ஓர் ஊரில் வேலை, வெட்டி இல்லாமல் ஒருவர் இருந்தார். அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி கணவனைப் பார்த்து, ""சும்மாவே உட்கார்ந்து இருக்கிறீர்களே, சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள்,'' என்றாள். உடனே கணவன், ""அதுபற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு அருமையான திட்டம் என் மனதில் உதித்துவிட்டது,'' என்றான். "என்ன திட்டம்' என ஆவலோடு வினவினாள் மனைவி. "ஒரு ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன்' என்றான் கணவன். "சரி' என்றாள் மனைவி. ""அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும். நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்,'' என்றான். ""ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்,'' என்றாள் மனைவி. அதற்கு கணவன், ""அது வளரும். நிறைய குட்டிகள் போடும்,'' என்றான். "பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்' என்றாள் மனைவி. ""அதையெல்லாம் சந்தையில் கொண்டு போய் விற்று, வரும் காசில் ஒரு பசு மாடு வாங்குவேன்,'' என்றான். "அது எதற்கு' என கேட்டாள் மனைவி. ""பசு மாடு நிறைய பால் கொடுக்கும். அதை பால் பண்ணையிலே ஊற்றினால் நிறைய காசு கிடைக்கும். நாமும் காபி சாப்பிடலாம். உடல்நலம் குன்றியிருக்கும் எனது தந்தைக்கும் குடிக்க பால் கொடுக்கலாம்,'' என்றான். உடனே மனைவி, ""அடுத்த தெருவில் இருக்கும் என் அம்மாவின் வீட்டுக்கும் பால் கொடுக்கலாம்,'' என்றாள்.

வாங்காத மாட்டுக்கு சண்டை: உடனே கணவனுக்கு கோபம் வந்துவிட்டது. ""அது எப்படி உங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுக்கணும். அதெல்லாம் முடியாது,'' என்றான். இந்த இடத்தில் சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது. இருவரும் கடுமையாக சத்தம் போட ஆரமித்துவிட்டனர். கடுமையான சண்டை நடப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான். இருவரும் வாங்காத மாட்டுக்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும். இருப்பினும், ""உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து, பயிரையெல்லாம் நாசப்படுத்தி விட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்,'' என்றான். இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, ""நான் இன்னும் மாடே வாங்கவில்லை. உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்,'' என கேட்டான். உடனே பக்கத்து வீட்டுக்காரன், ""மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுத்தனுப்ப முடியுமோ, அதுபோல தான் இல்லாத என் தோட்டத்திலும் உன் மாடு மேய முடியும்,'' என்றான். அப்போது தான் கணவனுக்கு புத்தி வந்தது. இல்லாத ஒன்றுக்கு அர்த்தமில்லாம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தான். இல்லாத விஷயங்களுக்கு சண்டை போட்டுக்கொண்டு, இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிற நிறைய பேர் இருக்கின்றனர் என்பதைத் தான் இந்த கதை உணர்த்துகிறது.

சவாலே சமாளி: வாழ்க்கையே ஒரு சவால் தான். அதுவும் திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்தது தான். இந்த சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும், தெளிவையும் நீங்கள் பெற வேண்டும். சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகி ஓடுபவர்களை விட, எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

வெற்றி நிச்சயம்: சாவல்களை கண்டு அஞ்சுபவர்களை சமூகம் புறந்தள்ளும். சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்பவர்களைத் தான் சமூகம் வரவேற்கும். ஆனால், காலையிலே மேடையிலே சவால் விட்டுப் பேசி, மாலையில் "ஜகா' வாங்குபவர்களை சவடால் பேர்வழி என்று தான் உலகம் சொல்லும். சந்திக்க வேண்டிய சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ள நீங்கள் துணிந்துவிட்டால், அதற்கான வழிமுறைகள் தானாகப் பிறக்கும். துன்பங்களைக் கண்டு துவண்டு விடும் கோழைத்தனத்தை விட, எதிர்த்து நின்று போராடும் துணிவே நம்மை வாழ வைக்கும். இதைப் புரிந்து கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இன்று இல்லற வாழ்வில் இணைந்துள்ள அனைவரும், கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல, வானமும் நிலவும் போல, கடலும் அலையும் போல, எண்ணும் எழுத்தும் போல, ஒற்றுமையுடன் வாழ்ந்து, பதினாறு செல்வங்களையும் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். திருமண விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை செயலர் ராஜாராமன் நன்றி கூறினார்.

10,571 பேருக்கு இலவச திருமணம்: எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்த இலவச திருமண திட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 571 பேருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1982ல் இலவச திருமணத் திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதையடுத்து, 1991 முதல் 1996 வரை நான் முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க., சார்பில் சிதம்பரத்தில் 2,500 பேருக்கும், திருச்சியில் 5,004 பேருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இதன்பின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவேற்காட்டில், 2002ல் 1,008 பேருக்கும், 2003ல் 1,053 பேருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இன்று, 1,006 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. மொத்தமாக, 10 ஆயிரத்து 571 பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என, ஜெயலலிதா கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
19-ஜூன்-201218:57:13 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி யப்பா சாமி தாங்க முடியலடா சிரிப்பு,, ஹய்யோ ஹய்யோ....., நம்ம ஆளுங்க என்னமா சிந்திக்கிறாங்க.. இதில எத்தனை உள் அர்த்தம். எத்தனை ரெட்டை அர்த்தம், எத்தனை ரெட்டை கிழவி, எத்தனை தொல்காப்பியம்.. எத்தன சீவக சிந்தாமணி, எத்தனை காக்கை பாடிநியாரின் கருத்துக்கள்.. உரிச்சி உரிச்சி வெச்சிட்டாங்க. வாசகர்கள்.... மறுபக்கம் கக்கூஸ் போனா எந்த கையால் கழுவனுன்னு மாத்திரம் பாட்டி சொல்லி தரல. பாக்கி எல்லாம். ஹய்யூ ஹய்யோஒ
Rate this:
Share this comment
Cancel
Kavi.J - chennai,இந்தியா
19-ஜூன்-201218:40:41 IST Report Abuse
Kavi.J jaya has no right to advise about marriage bonding instead she may advise how to become culprit dictator.
Rate this:
Share this comment
Cancel
dikl - lhjk,பெலாரஸ்
19-ஜூன்-201216:59:09 IST Report Abuse
dikl பெண்ணை பெற்ற தாய் குலங்களின் வாழ்த்தும் ,அன்பும் ,என்றும் அம்மாவை சூழ்த்து நிச்சயம் நிற்கும்,,தொடரட்டும் சாதனைகளும்,இல்லாத குடும்பங்களின் உயர்வுக்கு வழிகாட்டுதலும் நல்லதை செய்யும் அன்னை j .j வாழ்க
Rate this:
Share this comment
Cancel
GNANAKUMAR G - coimbatore,இந்தியா
19-ஜூன்-201216:27:58 IST Report Abuse
GNANAKUMAR G சூப்பர் குட்டி கதை , மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
Rate this:
Share this comment
Cancel
A,Manjuladevi B.S.c.,B.A.,B.Ed., - perambalur ,இந்தியா
19-ஜூன்-201215:57:39 IST Report Abuse
A,Manjuladevi B.S.c.,B.A.,B.Ed., why this TN govt waste common people tax money by doing free marriage?this shows CM a lazy and also a bonless persons in their life.how can we develop our TN as a number one in india?we cannot digest as like this.why not give a job to them for maintain their good life?so dont waste our money to do as like this.if you want to do social service to the people by encourage the army persons or psychological affected persons in trust or blind,handicaped persons also.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஜூன்-201215:36:25 IST Report Abuse
muthu Rajendran தமிழகத்தின் பல குடும்பங்கள் டாஸ்மாக் கடையின் மதுவால் சீரழிந்து வருகின்றன. ஒரு பக்கத்தில் அரசு துறை செலவில் இலவச திருமணம் நடத்தி விட்டு அந்த குடும்பத்தின் வருவாயை அரசு மதுக்கடை பறித்து கொள்ள அனுமதிப்பது சரியா? திருமணம் கூட தங்கள் செலவில் செய்துகொள்ள முடியாத ஏழைகளின் வருவாயை மதுவால் பறிப்பது சரிதானா ? ஏழைகள் முன்னேற தமிழக தொழிலாளிகள் மீண்டும் தங்கள் தொழிலை நன்கு செய்து முன்னேற மதுக்கடைகளை மூடினால் உங்களுக்கு கோடி புண்யம் கிடைக்கும்.பல ஏழை குடும்பங்கள் உங்களை வாழ்த்தும் தமிழக பண்பாடு ,அமைதி. ஒழுக்கம் அனைத்தையும் பாதுகாக்க மதுவிலக்கே சரியான வழி
Rate this:
Share this comment
Cancel
jiaul haq - riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201215:23:41 IST Report Abuse
jiaul haq உங்களுக்கு அந்த தகுதி கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201215:21:53 IST Report Abuse
Pugazh V திரு நவமயம் மற்றும் பிரகாஷ் - இருவரின் கருத்துக்களும் சூப்பரோ சூப்பர் ( ஜெயலலிதாவைப் பற்றி சொல்லும் போது மட்டும் ஒருவர் "தனிமனித விமர்சனம் வேண்டாமே" என்கிறார். அதே சமயம் மு க வின் குடும்பம் பற்றியும், கனிமொழியின் கணவர் ( அரவிந்தன்) பற்றியும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் போது வாய் மூடி இருந்தீர்கள்??
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
19-ஜூன்-201213:25:50 IST Report Abuse
ANBE VAA J.P. திரு அரூர் அவர்களே இங்கே கனிமொழியை பற்றி மட்டும்,அவரின் ஊழலை தவிர்த்து ,அவரின் சொந்த வாழ்கை,ராஜா ,அரவிந்தன் ,மற்றும் பல விஷயங்கள் பற்றியும் இங்கே பெரும் "பலான" அன்பர்கள், தங்கள் எண்ணம்போல் கருத்து தெரிவித்த போது நீங்கள் எங்கு சென்றீர்கள் ?அதையும் இந்த உண்மையின் உரைகள் வெளியிட்டதே. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் பொது வாழ்கைக்கு வந்து விட்டால் எதையும் செய்வதற்கு முன் ,பேசுவதற்கு முன்னும் அதுக்கு நாம் தகுதியானவரா ?என்பதை எண்ணி பாத்து செய்ய வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ? அனைத்து அரசியல் வாதிகளுக்கும் இது பொருந்தும் .இல்லாவிடில் இவ்வாறு நகைப்புக்கு உள்ளாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
kannan - trissur  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201212:05:47 IST Report Abuse
kannan எப்போதும் கலைஞர் செயல் வீரர். இவர் சொல்கிறார்,அவர் ஏற்கனவே செய்துவிட்டார். மேலும் இது போன்ற காரியங்களுக்கு பணத்தை வீணாக்குவதை விட செம்மொழி மாநாடு போன்ற ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் உயரக்கூடிய மாநாட்டிற்கு 100 கோடி செலவு செய்யலாம்
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
19-ஜூன்-201214:16:52 IST Report Abuse
Gokulஅப்படி என்ன வாழ்வு ஆதாரம் உயர்ந்துச்சு?...
Rate this:
Share this comment
Rajez _R - Chennai,இந்தியா
19-ஜூன்-201214:59:17 IST Report Abuse
Rajez _Rசெம்மொழி மாநாட்டால ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததா? எங்கடா?...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜூன்-201217:01:51 IST Report Abuse
Nallavan Nallavanதிமுக பிரமுகர்களை ஏழை, எளியவர்கள் என்று குறிப்பிட்டதை அப் பிரமுகர்கள் படித்தால் அவர்களுக்கே சிரிப்பு வரும்...
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
19-ஜூன்-201219:42:54 IST Report Abuse
Sundeli Siththarஇதுதான் வஞ்சப் புகழ்ச்சி அணி.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்