Change in Tamilnadu cabinet? | அமைச்சர்கள் மாற்றமா: கோட்டையில் பரபரப்பு: இன்று அமாவாசையால் எகிறுது எதிர்பார்ப்பு| Dinamalar

அமைச்சர்கள் மாற்றமா: கோட்டையில் பரபரப்பு: இன்று அமாவாசையால் எகிறுது எதிர்பார்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அமைச்சர்கள் மாற்றமா: கோட்டையில் பரபரப்பு: இன்று அமாவாசையால் எகிறுது எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று அமாவாசையாக இருப்பதால், அ.தி.மு.க., தரப்பில் அதிகமாக யூகங்கள் கிளம்பியுள்ளன. இதனால், கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றிபெறவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க.,வின் பெயரைக் குறிப்பிடாமல், இத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இத்தேர்தலில் 30,500 ஓட்டுக்களை பெற்று டெபாசிட்டையும் தே.மு.தி.க., வேட்பாளர் தக்கவைத்துள்ளார். இது அ.தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


சந்தேகம்: இடைத்தேர்தலிலேயே கட்சித் தலைமை சொன்னதை நிறைவேற்ற முடியாத அமைச்சர்களால், லோக் சபா தேர்தலில் சாதிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது. மூன்று பூத்களில் அ.தி.மு.க.,வை வீழத்தி தே.மு.தி.க., வெற்றிபெற்றதே இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுமட்டுமின்றி, சில அமைச்சர்கள், கட்சிப் பணியைக் காட்டிலும், வருவாய் ஈட்டுவதிலேயே குறியாகவுள்ளனர். குறிப்பாக, டாஸ்மாக் குடிமையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பினாமிகள் மூலம் அவர்கள் சாம்ராஜ்ஜியம் தான் நடக்கிறது. இவர்களால், மற்ற கட்சியினர் மட்டுமின்றி ஆளும்கட்சியினரும் வருவாய் இழந்துள்ளனர். கட்சிக்காகக் கடுமையாக உழைத்தும் பலனில்லாததால், அவர்கள் சோர்ந்து போயுள்ளனர்.


குழப்பம்: நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளார். ஒரு சில அமைச்சர்கள் மீது, கட்சியினர் புகார்களைத் தெரிவித்துள்ளனர். கோஷ்டி மோதல்களால் மாவட்டங்களில் கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுகிறது. முதல்வரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சில அமைச்சர்கள் திணறுகின்றனர். இதை ஆராய்ந்து அறிந்த கட்சித் தலைமை, அமைச்சர்கள் சிலரை கழற்றிவிட்டால் மட்டுமே, ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.


அமாவாசை: இன்று அமாவாசை என்பதால், அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற தகவல் அமைச்சர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க., அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமாவாசை தினத்தன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன் நடந்த சம்பவங்களை அ.தி.மு.க.,வினர் நினைவு கூர்கின்றனர். "மறைந்த மூப்பனார் தலைமையிலான த.மா.கா., உடன் தேர்தல் கூட்டணி உடன்பாட்டை அமாவாசை தினத்தன்று தான் இறுதி செய்தார். அதேபோல், வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் அமாவாசை தினத்தைத் தான் தேர்வு செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர்களை அமாவாசை தினத்தன்று வேட்புமனு தாக்கல் செய்யப் பணித்தது என பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடி பலரும், இன்று அமைச்சரவை மாற்றம் வராதா என காத்திருக்கின்றனர். முதல்வர் எந்த மாதிரியான அதிரடியை கையாளப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல், அமைச்சர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பலரது வயிற்றில் புளி கரைக்கவும் துவங்கியுள்ளது. முன்பு மன்னார்குடி கும்பல் மூலம் பலர் காரியம் சாதித்தனர். முதல்வர் ஜெ.,வின் அதிரடியால், அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாரைப் பிடித்து பதவியைத் தக்கவைப்பது என்று தெரியாமல் பலர் குழம்பிப் போயுள்ளனர்.


- நமது சிறப்பு நிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜூன்-201207:59:26 IST Report Abuse
Pannadai Pandian மறுபடியும் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை மந்திரி ஆக்குங்கள். இன்னும் சில துடிப்பான இளைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து புது ரத்தத்தை ஊட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Satheesh Kumar - Chennai,இந்தியா
19-ஜூன்-201207:53:40 IST Report Abuse
Satheesh Kumar அவர் கட்சியில் உள்ள அனைத்து MLA வும் ஒருமுறையாவது மந்திரி ஆகிவிடுவார்கள். இந்த ஐந்தாண்டு ஆட்சியில், இன்னும் சில தினக்களில் திங்கட்கிழமைகளில் இவர் இந்த துறைக்கு அமைச்சர் செவ்வாய்கிழமைகளில் அதே துறைக்கு இன்னொருவர் மந்திரி என்ற நிலைமை வந்தாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை... அமைச்சர்கள் துறையை கவனிக்கிறார்களோ இல்லையோ நன்றாக இடைதேர்தல் பணிகளை கவனிகிறார்கள் - இல்லையென்றால் தங்கள் துறைகளில் எங்கு விலையை எப்படி ஏற்றலாம் என்று மட்டும் கணக்கு கொடுகின்றார்கள் - சபாஷ் நல்ல அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் தமிழ் நாடு உருப்பட்டு விடும்
Rate this:
Share this comment
Cancel
Arun Prasath - Shibata-shi,ஜப்பான்
19-ஜூன்-201207:33:46 IST Report Abuse
Arun Prasath இப்படியே அமைச்சர்களை மாற்றி கொண்டிருந்தால் எந்த அமைச்சரும் அவரவர் துறையின் மீது நாட்டம் செலுத்த போவதில்லை....ஏனன்றால் எப்படியும் 2 மாதத்தில் இன்னொரு துறை கிடைக்கும் அல்லது நீக்கபடுவார்கள்......
Rate this:
Share this comment
Cancel
Nish Anthan - madurai,இந்தியா
19-ஜூன்-201207:31:58 IST Report Abuse
Nish Anthan இப்ப அந்த கவர்னரே இட ஆக்கிரமிப்பு வழக்கில் நிற்கிறார். அவரை தான் இப்போ மாற்றனும்.
Rate this:
Share this comment
Cancel
IRAIYANBAN - Madurai,இந்தியா
19-ஜூன்-201206:56:09 IST Report Abuse
IRAIYANBAN அய்யா முதலில் உள்ளாட்சிய மாத்துங்கய்யா. அவரோட தொல்லை தாங்க முடியவில்லை எனப் புலம்புகிறார்கள் ஊழியர்கள்,ஒப்பந்ததாரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-ஜூன்-201205:56:04 IST Report Abuse
NavaMayam அம்மா ஆசையே தமிழகத்தின் அமாவாசை ...
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-ஜூன்-201205:51:32 IST Report Abuse
s.maria alphonse pandian அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட துறைகளை கவனிக்க விட்டால்தானே அவர்களுக்கு ஏதாவது தெரிகிறதா என செக் பண்ண முடியும்?அவர்கள் திருச்சி சென்று வந்தார்கள்..உடனே சங்கரன் கோயில்...பின்னர் புதுக்கோட்டை....
Rate this:
Share this comment
Cancel
vramanujam - trichy,இந்தியா
19-ஜூன்-201203:37:45 IST Report Abuse
vramanujam உண்மையான ரிப்போர்ட் . மந்திரிகளின் செயல் பாடுகளில் குறைவு இருந்தால் ரகசிய ரிப்போர்ட் படி மாத வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Paris EZHILAN - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-201202:15:05 IST Report Abuse
Paris EZHILAN தமிழ் நாடுக்கு செய்ய வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் முதல்வரோ அல்லது அவர் அமைச்சர்கள் இடைத் தேர்தல் பணி மட்டும் செய்கின்றன. 50% தமிழ்நாடு மக்கள் கழிவு அறை வசதி இன்றி வாழ்க்கை செய்கின்றன. அரசாங்க பள்ளிகள் தரம் இன்றி உள்ளன. அரசாங்க மருத்துவ நிலையங்கள் மிக கேவலமான தரத்தில் உள்ளது. இதை போல் பல சீர்கேடுகளை பட்டியல் போட்டு கொண்டே போகலாம். தமிழ்நாடு அரசு இதை சீர் செய்தல் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamil Mani - Amritsar,இந்தியா
19-ஜூன்-201200:07:14 IST Report Abuse
Tamil Mani first Dr.vijay health
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-201201:53:06 IST Report Abuse
KAARTHIகவர்னர் என்ன சொல்கின்றார் ? ஆளையே காணோமே ? அவர் நினைத்தால் கூண்டோடு மாற்றலாம்...அது எல்லோருக்குமே நல்லது.....
Rate this:
Share this comment
Mohan Raj - Chennai,இந்தியா
19-ஜூன்-201208:03:21 IST Report Abuse
Mohan Rajபோங்க தம்பி நாங்க கவர்னரையும் மாத்த போறோம் ........?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.