DISTRICT NEWS | தேனி நிலத்திற்கு போலி ஆவணம் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு| Dinamalar
Advertisement
தேனி நிலத்திற்கு போலி ஆவணம் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மூணாறு:தேனியில் உள்ள நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து,மூணாறு வங்கியில் ரூ,50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. தேனியைச் சேர்ந்தவர் சங்கரய்யர்.இவர் தேனியில் உள்ள நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து,மூணாறு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் கிளையில் கடந்த 2006ல் ரூ.50 லட்சம் கடன் பெற்றார். இதற்கு உடந்தையாக இருந்த தேனி கே.ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த சுரேஷ்,பங்களாமேட்டைச் சேர்ந்த ஜெயமணி, ஆகியோரை கடந்த 29ல் மூணாறு போலீசார் கைது செய்தனர்.சங்கரய்யர் தலைமறைவாக உள்ளார்.

போலி முத்திரை: சங்கரய்யருக்குச் சொந்தமாக கிராம பகுதியில் உள்ள நிலத்திற்கு,தேசிய நெடுஞ்சாலையில் நிலம் உள்ளதாக போலி ஆவணங்களுடன், தேனி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்து,வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.இதற்காக சங்கரய்யர் போலி முத்திரைகள் தயார் செய்தது தெரிய வந்துள்ளது.அதிகாரிகளுக்கு தொடர்பு: தமிழகத்தில் உள்ள நிலத்திற்கு, மூணாறு வங்கி கிளையில் கடன் வழங்கியதில் அதிகாரிகளின் தொடர்பு குறித்து இன்ஸ்பெக்டர் மோகனன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.வங்கி கிளை நிர்வாகத்திற்கு அதிக பட்சம் ரூ,10 லட்சம் வரை நேரடியாக கடன் வழங்க அனுமதியுண்டு.
கூடுதலாக கடன் வழங்குவதற்கு தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடன் வழங்கப்பட்ட போது பணியாற்றிய சில அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.முதல் கட்ட விசாரணையில் மோசடியில் நில மதிப்பீட்டாளர் மற்றும் வங்கியின் உதவி பொது மேளாளர் ஆகியோருக்கு தொடர்புள்ளது, தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்