DMK to discuss arrest of former ministers | தொடர்கதையாகும் கைது படலம்: தி.மு.க., பொதுக்குழுவில் முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர்கதையாகும் கைது படலம்: தி.மு.க., பொதுக்குழுவில் முடிவு

Updated : ஜூன் 20, 2012 | Added : ஜூன் 18, 2012 | கருத்துகள் (61)
Advertisement

சென்னை: "தி.மு.க., நிர்வாகிகள் கைது செய்யப்படுவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க, விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார். இதுகுறித்து, நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்து பேட்டி:இலங்கையில், தமிழர் வாழும் பகுதிகளில் கூட சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள், இதுகுறித்து, விரிவாகப்பேசி முடிவெடுக்க, விழுப்புரத்தில் "டெசோ' மாநாட்டை நடத்துகிறோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன. மாநாட்டு ஏற்பாடுகளை அதன் செயலர்கள் கவனித்து வருகிறார்கள். அகில இந்திய அளவில் பேர் வாங்கத்தான், ஜனாதிபதி வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதிலே, அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் நான் எதுவும் பேச விரும்பவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.க., முன்னணியினரெல்லாம் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நேற்று முன் தினம் கைதாகி விடுதலையான மதுரை மாவட்ட தி.மு.க., செயலர் தளபதியை மீண்டும் கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதுபற்றியெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்க, கட்சியின் பொதுக்குழு அல்லது செயற்குழு விரைவில் கூடும், என்றார்.

ஜூன் 22ல் தி.மு.க., செயற்குழு: தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: வீரபாண்டி ஆறுமுகம் மீது இன்றைக்கு பரமபதசோபன ஆட்டத்தில் பாம்பின் தலைக்கே காய் நகர்த்துவது போல, அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. மதுரை மாநகர மாவட்டச் செயலர் தளபதியை இரு நாட்களுக்கு முன், ஒரு வழக்கிலே கைது செய்து, கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்த பின், வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து, மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். இனியும் தி.மு.க., பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. வீண் பழி சுமத்தும் படலத்தை தமிழகம் இனியும் தாங்காது என்பதை எடுத்துக் காட்டும் வகையில், எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவெடுக்க, தி.மு.க.,வின் அவசரச் செயற்குழுக் கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் கூடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maha - bangalore,இந்தியா
19-ஜூன்-201214:51:31 IST Report Abuse
maha திரு தங்கராஜ் இங்கு விவாதிக்கப்படும் பொருள், ஆறுமுகம் என்பவர் குண்டர் சட்டத்தில் உள்ளே போடும் அளவுக்கு மோசமானவரா என்பதுதான். என்னை போன்ற நடுநிலையாளர்கள், திமுகவின் அராஜகம், ஊழல் குறித்து எது பேசினாலும், ஏன் இவர் செய்யவில்லையா,அவர் செய்யவில்லையா என்று பேசுகிறீர்களே ஒழிய, உங்களால் ஆறுமுகம் உத்தமர், யோக்கியர் என்று அடித்து குற முடியவில்லை. ஒன்றை நினைத்து பாருங்கள் . .இதே ஜெயலலிதா, 2001 ல் வந்தபோது, திமுகவின் மேல், இந்த அளவுக்கு ஊழல் குற்ற சாட்டுகள் இல்லை. ஜெயாவால், முக மேல் ஒரு கேசை பொய்யாகத்தான் போட்டு கைது செய்ய முடிந்தது. 96 -2001 ல் , மாறன் செயல்பாட்டில் இருந்ததால், cit காலணியையும், அழகிரியையும், ஆறுமுகம் போன்றவர்களையும் கட்டுக்குள் வைத்து இருந்தார். திமுக பொதுக்குழு மேடையிலேயே அவர் ஆற்காட்டார் போன்றவர்களை, நேருக்கு நேர் useless என்று பேசியது உண்டு. ஆனால் 2006 - 2011 திமுக ஆட்சி, தமிழகம் இது வர பார்க்காத தறி கெட்ட ஊழல், அராஜக, கொலைகார ஆட்சி என்பதை பாரம்பரிய திமுக அபிமானிகளே ஒத்து கொள்கிற விஷயம். மீண்டும் சொல்கிறேன், என் போன்ற நாட்டு நலனில் அக்கறை கொண்ட நடு நிலையாளர்கள், ஜெயா அரசில் நிர்வாக சீர்கேடு,விலையேற்றம் போன்ற பிரசினைகள் இருந்தாலும் , வேறு மாற்றை தேடுவோமே ஒழிய, மீண்டும் திமுகவுக்கு போட மாட்டோம் . இதை காலம் நீருபிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201212:45:27 IST Report Abuse
Rangarajan Pg இவர்கள் கட்சியினர் இஷ்டத்திற்கு LEFT , RIGHT AND CENTRE மக்களை ஏமாற்றி, மிரட்டி, பயமுறுத்தி அவர்கள் சொத்துக்களை கொள்ளை அடிப்பார்களாம். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இவர்கள் பொதுக்குழு செயற்குழு என்று கூட்டி நடவடிக்கைகளை கண்டிப்பார்களாம்? . என்ன தமாஷ் இது? இவர்கள் ஆட்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் அவர்களை என்ன கொஞ்சி விளையாடவா முடியும்? இவர்கள் ஆட்சியில் செய்த அராஜகம் தான் தமிழகம் முழுக்க தெரியுமே. இவர்கள் கட்சியில் நல்லது என்று ஒரு விஷயம் குறிப்பிட்டு கூற முடியுமா? இவர்கள் கட்சியினர் நல்லது செய்தனர் என்று ஒரு விஷயத்தை குறிப்பிடமுடியுமா? இவர்கள் ஆட்சியில் உண்மையிலேயே தமிழகத்திற்கு நல்லது நடந்தது என்று உறுதியாக கூற முடியுமா? முடியாது. இவ்வளவு அராஜகம் செய்தவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களை சுதந்திரமாக நடமாட விட முடியுமா? இது என்ன இவர்கள் பங்கு பெரும் மத்திய ஆட்சியா, ஜாமீன் கிடைத்த உடனே ஏதோ விடுதலை கிடைத்த மாதிரி சுதந்திரமாக திரிவதற்கு? இவர்கள் செய்துள்ள குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யபடுகிறார்கள். இவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கிறார்கள். என்னுடைய பார்வையில், இவர்கள் அனுபவிக்கும் தண்டனை போதாது. இன்னமும் பெரிய தலைகள் சுதந்திரமாக வெளியே தான் உள்ளன. அவர்களையும் பிடித்து உள்ளே தள்ளும் வரை இங்கே சட்டம் ஒழுங்கு முழுமையாக செயல்படவில்லை என்றே கூறுவேன். அதிமுக அரசு இவர்கள் மீது ஒரு SOFT CORNER வைத்திருக்கிறார்களோ என்றே நினைக்க தோன்றுகிறது. இன்னமும் HARDCORE ACTION எதிர்ப்பார்க்கிறேன். இவர்களே பொதுக்குழு செயற்குழு என்று கூடி அதிமுக அரசை PROVOKE செய்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-201212:13:58 IST Report Abuse
Ashok Raja ஏதோ பெரிய போர்ப்படை தலைவன் ரேஞ்சுக்கு பேர வைச்சுக்கிட்டு செய்யுற வேலை அவ்வளவும் அயோகியதனமும் மொள்ளமாரிதனமும் தான். இதுல போருக்கு போற மாதிரி கையாட்டல் வேற. இவனுக்கு வக்காலத்து வாங்க செயற்குழு பொதுகுழு கூட்டுறார் இந்த அயோகிய மடத்தின் தானை தலைவர்...மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க - உங்க மாதிரி இருக்குற எல்லா தண்டங்களுக்கும் வாழ் நாளுக்கும் ஆப்பு தான்.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
19-ஜூன்-201211:58:17 IST Report Abuse
krishna தவறு செய்தவர்கள் எந்த கட்சியானாலும் தண்டிக்க பட வேண்டும். சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனை ஊழல் வழக்குகள் .இதுவரை யாராவது தண்டிக்க பட்டு இருக்கிறர்களா.கருணாநிதி செய்யாத ஊழலா, ஜெயலலிதா செய்யாத ஊழலா .கண்டிப்பாக யாரும் செய்த ஊழலுக்கு தண்டனை அனுபவிக்க போவது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201211:47:34 IST Report Abuse
Matt P தவறுக்கு உட்பட்டிருந்தாலும் தி மு க காரங்களை கைது பண்ண கூடாது...தி மு க தலைவரை கைது பண்ண கூடாது ...ஏன் அப்படி?....தி மு க ஒரு கட்டு கோப்பான கட்சி .தி மு க வே ஒரு குடும்பம் ...உங்களுக்கு என்று தனியா ஒரு சட்டமா? ...கைது செய்யிறதை தப்பு என்று நினைக்கிற நீங்க ....ஆட்சியிலிருந்த போது உங்க தொண்டர்களை விருப்பத்துக்கு விளயாட விட்டிருவீங்க....காஞ்ச மாடு .............,,,,,,,கொல்லையில் .மேயட்டும்-கொள்ளயடிகட்டும் என்று......இதையெல்லாம் தெரிந்து தான் மக்கள் தண்டனை கொடுகிறார்கள்......கொஞ்சம் மனசாட்சிபடி நடந்து பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201210:51:03 IST Report Abuse
Jeyaseelan அதிமுக ஆட்சியில் அமர்ந்து 13 மாதங்கள் முடிந்து விட்டது, 5 வருடம் ஓடக்கூடிய மெகா சீரியலில் 13 எபிசோடுகள் முடிந்து விட்டது, இன்னும் விளம்பரங்களும் எழுத்தும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, கதை எப்போது எத்தனாவது எபிசோடில் தொடங்கும் என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
raja.s - cuddalore,இந்தியா
19-ஜூன்-201210:11:56 IST Report Abuse
raja.s தப்புதான்... இப்படிப்பட்ட சுதந்திர போராட்ட தியாக செம்மல்களை இப்படிபோட்டு வதைப்பதை நினைக்கும் பொது என் நெஞ்சம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது, உள்ளம் கொதிக்கிறது, உதடு துடிக்கிறது. ( வேற என்னத்த சொல்ல? ) ஆமா இந்த குண்டர் சட்டம் குண்டர் சட்டம்னு சொல்லறாங்களே..அவ்ளோ குண்டாவா அவங்க இருப்பாங்க? டெயில்பீஸ்: ஆமா எங்கப்பா நம்ப அஞ்சா நோஞ்சான் பாத்தே ரொம்ப நாளாச்சி? பாத்திங்கன்னா கேட்டதா சொல்லுங்க..........
Rate this:
Share this comment
Cancel
adiyamaan - Athipatti,இந்தியா
19-ஜூன்-201210:06:45 IST Report Abuse
adiyamaan இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு.. நீங்கள் தானாக சென்று நீதி மன்றத்தில் சரண் அடைந்து விடுங்கள். உங்கள் வாரிசுகள் தப்பும்.
Rate this:
Share this comment
Cancel
maruthipatti senthil nathan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201209:26:13 IST Report Abuse
maruthipatti senthil nathan ://www.dinamalar.com/splpart_detail.asp?id=93 - என்ன செய்வது மனது ஒப்பிட்டு பார்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
19-ஜூன்-201209:22:08 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மாநாடு நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன.....( செய்தி )ஐயா கலைஞர் அவர்களே " புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் ..." என்பதை உணர்ந்தாலே எல்லா பிரச்சினையும் முடியுமல்லவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை