Liqour price will increase soon | "சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்

Added : ஜூன் 18, 2012 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்

தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும், ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலையில், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய விலைப் பட்டியலும் தயார் நிலையில் உள்ளதால், எந்த நேரமும் விலை உயர்த்தப்படலாம் என டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில், 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.


21 ஆயிரம் கோடி இலக்கு: தமிழகம் முழுவதும் செயல்படும், 6,900க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூலம், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, 2012 -13ம் நிதி ஆண்டில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஜூன் 14ம் தேதி முதல் பீர் விலையில், ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களான பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


விலை உயர்வு பட்டியல் தயார்: அதற்கான விலைப் பட்டியலும் தயார் செய்யப்பட்டு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மூலம் முதல்வரிடம் அனுமதியும் வாங்கப்பட்டு விட்டது. இதனால், இன்று முதல் ஜூலை11ம் தேதிக்குள் எந்நேரமும் புதிய விலை பட்டியல்படி சரக்குகளின் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விலைப் பட்டியலின் படி தற்போது, 65, 75, 85, 95 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து குவார்ட்டர் பாட்டில்களின் (180 மி.லி.,) விலையும் இனி, 70, 80, 90, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். "ஆப்' பாட்டில்களின் (375 மி.லி.,) விலையில், ஐந்து ரூபாயில் முடியும் அனைத்து சரக்குகளின் விலையில், 15 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 10 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. இதே போல், "புல்' பாட்டில்களின் (750 மி.லி.,) விலையைப் பொறுத்தவரை, ஐந்து ரூபாயில் முடியும் சரக்குகளின் விலையில், 25 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 20 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. உயர்ரக மதுபானங்களான, "ஸ்காட்ச்' சரக்குகளின் விலையில், 45 ரூபாய் முதல், 125 ரூபாய் வரையில் உயர்வு செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஐந்து ரூபாய் விலையை உயர்த்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், இனி அனைத்து சரக்குகளின் விலையும் இரட்டை இலக்கம், அதாவது 70, 80, 90 ரூபாயில் முடியும் வகையில் விலைப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரக்கு விலையில் அவற்றின் பழைய விலையில் இருந்து குறைந்த பட்சம், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரையில், அளவைப் பொறுத்து உயர்வு செய்யப்பட்டுள்ளது.


எப்போதும் வெளியாகலாம்...: இது குறித்து பேசிய, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர், ""பொதுவாக டாஸ்மாக் கடைகளில் சரக்கு விலையில் உயர்வு என்பது ஜூலை11ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் பீர் விலை ஜூன்14ம் தேதி முதல் உயர்த்தப்பட்டு விட்டது. அதை அடுத்து, பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் சரக்குகளின் விலையை உயர்த்துவதற்கான ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு விட்டது. புதிய விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. விலை உயர்வு இன்று முதல் ஜூலை11ம் தேதிக்குள் எந்நேரமும் வெளியாகலாம்,'' என்றார்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Govindarajur Rajarethinam - Tiruchirappalli,இந்தியா
19-ஜூன்-201222:54:32 IST Report Abuse
Govindarajur Rajarethinam டாஸ்மாக் மதுக்கடைகள் கிராமம்தோறும் வந்தபின்னர்தான் இளைய சமுதாயம் குடிபழக்கத்திற்கு அடிமையாகி விட்டது. இதன் காரணமாகவே குற்றங்கள் பெருகி விட்டன. மதுவிலக்கு வரவில்லைஎன்றல் சமுதாய சீரழிவு உச்சத்திற்கு செல்லக்கூடிய நாள் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம். இதற்கு உண்டான பாவம் அனைத்தும் டாஸ்மாக் கடையினை ஊர்தோறும் கொண்டவந்த அம்மையார் அதனை தொடர்ந்து நடத்திய தமிழின தலைவர் ஆகியோரையே சேரும்.
Rate this:
Share this comment
venkat - Nagpur,இந்தியா
19-ஜூன்-201223:25:28 IST Report Abuse
venkatமதுக்கடைகள் இல்லாத நாடோ நகரமோ கிராமமோ கிடையாது. மது தடை செய்யப்பட்ட குஜராத் மாநிலம் மற்றும் வார்தா நகரில் திருட்டு தனமாக அதிக விலைக்கு எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். தமிழ் நாட்டு மக்கள் என்ன வாயில் விரல் வச்சா கடிக்க தெரியாத பச்சை புள்ளைங்களா ...இது நிதி பிறந்த புண்ணிய பூமி..ராஜாவும் கனியும் பிறந்த புண்ணிய பூமி...
Rate this:
Share this comment
venkat - Nagpur,இந்தியா
19-ஜூன்-201223:29:11 IST Report Abuse
venkatமதுக்கடைகள் இல்லாத நாடோ நகரமோ கிராமமோ கிடையாது மது தடை செய்யப்பட்ட குஜராத் மாநிலம் மற்றும் வார்தா நகரில் திருட்டு தனமாக அதிக விலைக்கு எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் தமிழ் நாட்டு மக்கள் என்ன வாயில் விரல் வச்சா கடிக்க தெரியாத பச்சை புள்ளைங்களா ...இது நிதி பிறந்த புண்ணிய பூமி..ராஜாவும் கனியும் பிறந்த புண்ணிய பூமி...
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
19-ஜூன்-201219:33:01 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN ஏழை சமுதாயத்தையே மது பெரும்பாலும் சீரழிக்கிறது. இந்த விலையேற்றம் இந்த மக்களையே இன்னும் பாதிக்கும். அரசு முதலில் இந்த மது தயாரிப்பு, இது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும். யார் யாருக்கு, என்ன என்ன வகையில் அனுமதி, எதற்காக வழங்கப்பட்டது என்ற விவரம் உடனடியாக வெளியிட வேண்டும். யார் பையை நிரப்ப இந்த விலை உயர்வு?
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
19-ஜூன்-201219:29:51 IST Report Abuse
kurumbu நல்ல முடிவு அப்போதாவது திருந்துவார்களா நமது "குடி மகன்"கள்........................................?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜூன்-201218:51:34 IST Report Abuse
Nallavan Nallavan குடியால் அழியும் குடும்பங்கள் ( சிறு குழந்தைகள் அனாதைகளாவது ரொம்பவே கொடூரம் ) குறித்து செய்திகளில் படித்து வாருங்கள். கழகங்களை ஆதரிக்கவே மாட்டீர்கள். ராஜாஜி முன்பு கலைஞரிடம் மன்றாடினார் என்று கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
19-ஜூன்-201216:11:09 IST Report Abuse
manoharan 1967 வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்ததால் மக்கள் தங்கள் தேக ஆரோக்கியத்தை கெடுக்காமலும் பணத்தை விரயம் செய்யாமலும், குடும்பங்கள் பட்டினியில் வாடாமலும், அக்கிரம செயல்களில் ஈடுபடாமலும் இருந்து வந்தனர். இந்த திராவிட கழகங்கள் தமிழ்மக்களை குடிக்கு அடிமையாக்கி கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டன. தன் சினிமாக்களில் குடிப்பது தீமை என்று உணர்த்திய எம் ஜி ஆரே மதுவிலக்கை கொண்டு வரவில்லை.குஜராத் முதல்வர் மோடியை பின்பற்றும் ஜெயா மதுவிலக்கை அமுல்படுத்தி அநேக கோடி தமிழ் மக்களின் கண்ணீரை துடைத்தால் ஆசீர்வாதமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Just imagine - chennai,இந்தியா
19-ஜூன்-201215:35:57 IST Report Abuse
Just imagine பால் விலை ஏறிய % விட சரக்கு விலை ஏறிய % மிக பெரும் குறைவு தான் .... இதற்காக முதல்வருக்கு குடிமக்கள் சார்பில் நன்றி ...........இவன் தமிழ் நாட்டு முதல் குடிமகன்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-201215:23:55 IST Report Abuse
g.s,rajan The liquor price can be raised twice the rate,so that it will have less consumption.The government should close the TASMAC,step by step.,otherwise the whole state will be ruined by liquor. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201215:12:29 IST Report Abuse
Pugazh V சசிகலாவின் மிடாஸ் நிருவத்திர்க்குக் கொள்ளை லாபம் வந்தாக வேண்டுமே அதற்க்கான நடவடிக்கை தான் இது. யாரும் எதுவும் பேச முடியாது. குடிப்பதை குறைக்கவே இந்த விலை ஏற்றம் என்று கூட சொல்வார்கள்- ஆனால் குடிப்பவன் குடித்துக் கொண்டு தான் இருப்பான். என்ன இனி விலை குறைந்த சரக்கடிப்பான். ( இதற்கும், மது விற்பனையை மு க தான் துவங்கி வைத்தார் என்று ஒரு சாரார் கூப்பாடு போடலாம்- மது விலக்கு அமலுக்கு வந்தால் கால் அசாராய மார்க்கட்காரர்களுக்கு யோகம் )
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-ஜூன்-201214:13:05 IST Report Abuse
s.maria alphonse pandian பாவம்..."குடி"மக்கள் பாதிக்கப்படுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201213:49:54 IST Report Abuse
Rangarajan Pg இந்த விலை உயர்வால் யாரும் மது குடிப்பதை குறைக்கவோ அல்லது மொத்தமாக விடவோ போவதில்லை. இன்னமும் அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டும். அவர்கள் குடும்ப செலவுக்கு கொடுக்கும் பணத்தை மிச்சபடுத்தி இங்கே வந்து கூடுதலாக செலவு செய்வார்கள். அவர்களுக்கு தேவை குடிக்க வேண்டும். பாவம் இந்த குடிகாரர்களின் மனைவிகளும் குழந்தைகளும் தான் கஷ்டபடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை