பொறியியல் கல்லூரி கல்வி கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வலியுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணம் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கான கட்டணத்தை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.


தமிழகத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2.2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில், 1.7 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டின் கீழ், "கவுன்சிலிங்' மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டு கல்விக் கட்டணமாக, 32 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 62 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.


தனியார் கல்லூரிகள் மனு: நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையிலான குழு, இக்கட்டணத்தை நிர்ணயித்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆறாவது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலை, நிர்வாகச் செலவு, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதால் ஏற்படும் செலவு உள்ளிட்ட, பல்வேறு செலவுகளை ஈடுகட்டும் வகையில், தற்போதைய கட்டணம் இல்லை என்றும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதைப்போல் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாலசுப்ரமணியம் குழுவிடம், கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, 250க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் மனு அளித்துள்ளன. அதில், தற்போதுள்ள கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளதாகத் தனியார் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.


கேரள கட்டணம்: கேரளாவில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில், 50 சதவீதத்தை அரசும், மீதியுள்ள 50 சதவீதத்தை கல்லூரி நிர்வாகங்களும் நிரப்புகின்றன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 50 சதவீத இடங்களில், 25 சதவீத இடங்களுக்கான கட்டணம், 35 ஆயிரம் ரூபாயாகவும், மீதியுள்ள 25 சதவீத இடங்களுக்கான கட்டணம், 60 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. மாணவரின் பெற்றோர் வருமானத்தின் அடிப்படையில், இப்படி இரு வகையாக அரசு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.நிர்வாக ஒதுக்கீடான 50 சதவீதத்தில், 15 சதவீத இடங்களை, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக் கொள்ள, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.


என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு: என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ், 5 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது. எனினும், கேரள அரசு, கூடுதலாக 10 சதவீத இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்தில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ், 5 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்ப அனுமதி உள்ளது. கல்விக் கட்டணத்தை உயர்த்துவதுடன், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டையும் உயர்த்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என, தனியார் கல்லூரிகள் எதிர்பார்க்கின்றன.


- நமது நிருபர் -


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Victor Christopher - sanaa,ஏமன்
19-ஜூன்-201219:22:21 IST Report Abuse
Victor Christopher If they could not run, let them hand it over to the Govt. And Govt. should take care of this issue. All the Engineering Colleges should be nationalised. A lot of Engineering Colleges are owned by Gang Leaders....very sad
Rate this:
Share this comment
Cancel
chandru - chennai,இந்தியா
19-ஜூன்-201216:54:38 IST Report Abuse
chandru பழைய கட்டணத்தில் கல்லூரி நடத்த முடியவில்லை என்றால் எப்படி ஒரு கல்லூரி ஆரம்பித்தவர் எல்லாம் 10௦ கல்லூரிகளை கட்டியுள்ளார். ஜெயா கல்லூரி 95ல் 1 , இன்று 4 பொறியியல், ஒரு மெடிகல், ஒரு டெண்டல், பல ஸ்கூல், பல கலை கல்லூரி. இதெல்லாம் எப்படி?..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201216:05:03 IST Report Abuse
Pugazh V ௮ தி மு க ஆட்சிக்கு வந்த பின் எங்கும் எதிலும் ஏற்றம் - விலை ஏற்றம் மின் வெட்டு நேரம் உயர்வு- -கட்டண உயர்வு - தாங்க முடியவில்லை. காலத்தின் கோலமோ, ௮ தி மு க வின் ராசியோ, மக்களைப் பாடாய்ப் படுத்துகிறது. கடந்த ஆட்சியைக் குறை சொல்லியே காலம் போகிறது லேப்டாப், ஆடு, மாடு, இலவச திருமணங்கள், தங்கம், அது இது என்று காசை வீணாக்காமல், கல்லோரிகளுக்கான மானியத்தைக் கூட்டி, மாணவர்களின்/ பெற்றோரின் கட்டண சுமையைக் குறைக்கலாமே எல்லோருக்கும் லேப் டாப் ஒன்றும் அவசியம் இல்லை. வீணாக TATA DOICOMO, RELIANCE, போன்ற தனியார் இன்டர்நெட் கம்பெனிகள் லாபம் பார்க்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
அருமை அண்& - மானாமதுரை,இந்தியா
19-ஜூன்-201211:44:24 IST Report Abuse
அருமை அண்& +2 படித்துவிட்டு வீட்ல போய் தூங்குங்க மாணவர்களே. நீங்களும் strike பண்ணலாமே...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு . சவுதி அரேபியாவில் மாணவர்கள் படிப்பு உணவு அனைத்து கட்டணத்தையும் அரசாங்கமே ஏற்றுகொள்கிறது. இங்கு லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அனைத்து பிரைவேட் காலேஜ் களையும் இழுத்து மூடுங்கள். அப்போதான் இவர்கள் திருந்துவார்கள் .
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜூன்-201216:52:01 IST Report Abuse
Nallavan Nallavanஒரு வெறுப்பில் சொல்லப்பட்டாலும் உங்கள் ஆதங்கம் புரிகிறது....
Rate this:
Share this comment
Cancel
B.Eswaran - Tirupur,இந்தியா
19-ஜூன்-201209:02:32 IST Report Abuse
B.Eswaran ஏத்து ஏத்து வருங்காலம் தமிழகம் படிபறிவில்லா தமிழகமாக மாறவேண்டும் அது தான் எல்லோருக்கும் நல்லது
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
19-ஜூன்-201208:45:05 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN உருப்படாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201208:16:18 IST Report Abuse
rajan ஏன் இரு மடங்கு ஏத்தி கேக்குறீங்க. அஞ்சு மடங்கு ஏத்தி கேட்டு பெட்ரோல் விலை குறைகுற மாதிரி ஒரு ஆயிரம் ரூபா குறைச்சு பைசல் பண்ணிக்கொள்ளுங்கள். நீங்க கல்லுரி நடத்த முடியாம படுற கஷ்டத்த நினைச்சு எங்களுக்கு ரொம்ப கவலை.
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
19-ஜூன்-201207:21:20 IST Report Abuse
குடியானவன்-Ryot Before 90s trusts and missionaries runs the educational tems, mostly eligible students are getting qualified to study, nowadays politicians are running the college. so they b the law in to their favor like getting government stip, bank loan all those things, nowadays 50% of students who studying in engineering are not even qualified to study engineering...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்