Electricity tariff should change every year: president of Appellate Tribunal for Electricity karpaga vinayagam | ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்| Dinamalar
Advertisement
ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: மாநில மின் வாரியங்கள், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றியமைக்க முன்வரவில்லை எனில், நுகர்வோர் மீது, ஒட்டுமொத்த சுமை விழாமல் தடுக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களே, தன்னிச்சை அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும் என, மத்திய மின்சாரத் தீர்ப்பாயத் தலைவர் கற்பகவிநாயகம் கூறினார்.


சென்னையில், மத்திய மின்சாரத் தீர்ப்பாயத் தலைவர் கற்பகவிநாயகம் அளித்த பேட்டி: கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக, முடங்கிக் கிடந்த தமிழக மின் வாரியத்துக்கு உயிர் கொடுத்து, தற்போது நிமிரச் செய்து வருகின்றனர். தமிழகத்தில், மின் வாரியத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான ஆர்வம் தெரிகிறது; இது, தொடர வேண்டும். தமிழக மின் வாரியம் நன்றாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வம், எனக்கு உள்ளது.


தனியாரிடம் பெறும் மின்சாரம்: மின் வாரியங்கள், தனியாரிடம் வாங்கும் மின்சாரத்துக்கான விலையை, மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களே முடிவு செய்ய வேண்டும். இது குறித்து, தீர்ப்பாயத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டால், தீர்ப்பாயம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மின்சார மேல் முறையீடுகளை, உடனுக்குடன் தீர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் இல்லாத மாநிலங்களில், அவை எங்கள் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல், நுகர்வோர் குறைதீர் மன்றங்களும், மின் குறை தீர்ப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கட்டணம் மாற்றியமைப்பு: நுகர்வோரை பாதிக்காத வகையில், ஆண்டுக்கு ஆண்டு, மின் வாரியங்கள் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். சட்டப்படி, கட்டண நிர்ணயத்தை, ஒழுங்கு முறை ஆணையம், 120 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். அது, 45 நாட்களுக்குள் தீர்ப்பாயத்துக்கு மேல் முறையீட்டுக்கு வந்தாக வேண்டும். இதை, தீர்ப்பாயம், 180 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவின் மீது, உச்ச நீதிமன்றத்தில், 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டின் மீதான முடிவை, 60 நாட்களுக்குள் எடுக்க வேண்டும்; அதன் பின், தாமதிக்கவே முடியாது. விலை நிர்ணயம் விரைவாக செய்ய வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய கால நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன.


ஆணையத்தின் அதிகாரம்: ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் தேதிக்குள், அந்த ஆண்டுக்கான மின் கட்டணத்தை முடிவு செய்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களே தன்னிச்சை அதிகாரத்தை பயன்படுத்தி, மின் பணி நிறுவனங்களின் செயல்பாடு, செலவினங்கள், வருவாய் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக, மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள், தங்களின் தன்னிச்சை அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்து வந்தன. இனி, அப்படி இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கற்பகவிநாயகம் கூறினார்.


சென்னையில் எப்போது? இதுவரை, டில்லியில் மட்டும், மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் செயல்பட்டு வந்தது. இனி, அதன் மண்டல அலுவலகங்கள், சென்னை, கோல்கட்டா, மும்பை போன்ற இடங்களில், செயல்பட உள்ளன. இதன் மூலம், அதிகளவிலான நுகர்வோர் பயனடைவர். நுகர்வோர் மேல் முறையீடு செய்வதற்கான கட்டணத்தையும் குறைக்க, நாங்கள் முயன்று வருகிறோம். சென்னையில், இதற்கான இடம் தேடி வருகிறோம். வரும் ஆகஸ்டில் இருந்து, சென்னை மண்டல அலுவலகம், மாதம்தோறும் செயல்படத் துவங்கும் என, மத்திய மின்சாரத் தீர்ப்பாயத் தலைவர் கற்பகவிநாயகம் தெரிவித்தார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஜூன்-201215:53:29 IST Report Abuse
muthu Rajendran வளர்ந்த நாடுகளில் கூட குடிநீர், மின்சாரம் , தொலைதொடர்பு கட்டணம் , முதலிய அத்தியாவசிய அம்சங்கள் கட்டணம் குறைவாக இருக்கும்படி பார்த்து கொள்கிறார்கள்.இங்கு என்னவென்றால் ஒரு குடும்பத்தின் மொத்த செலவில் வாடகைக்கு அடுத்து அதன் சரிபாதியாக மின்சார கட்டணம் வருகிறது. அரிசி பலசரக்கு கூட அடுத்து தான் .30 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எம் எல் எ களுக்கு சம்பளம் படி போக்கு வரத்து நிருவாக செலவுகள் பத்தாது என்று போதாகுறைக்கு ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சிலருக்கு மட்டும் கொடுக்கும் இலவசங்களுக்கும் சேர்த்து வரி கட்டணம் பொது மக்கள் செலுத்த வேண்டியுள்ளது
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
19-ஜூன்-201215:40:32 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN வெளி நாடுகளில் ஒரு வீட்டிற்கு இவ்வளவு மின்சாரம் தான் பயன்படுத்தவேண்டும் என்ற கணக்கு உண்டு. அது அதிகமாகும்போது மின்வாரியத்திலிருந்து கடிதம் அனுப்பப்படுவதோடு அதிகமாக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அப்படி வரும் கடிதத்தில் ஒவ்வொரு உபகரணமும் பயன்படுத்தும்போது எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற செய்தியும் இருக்கும். மின்சாரம் குறைத்துச் செலவிட தேவையான அறிவுரையும் கூடவே இருக்கும். இந்த வழக்கத்தை தமிழ் நாட்டிலும் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும். தேவை இல்லாமல் வீணாகும் மின்சாரமும் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Ulagarasan - Kolkatta,இந்தியா
19-ஜூன்-201215:05:26 IST Report Abuse
Ulagarasan அடப்பாவிகளா, இப்போதே மின்சாரக் கட்டணம் விழி பிதுங்க வைக்கிறது. இரண்டாயிரம் கட்டினவன் எல்லாம் ஐந்தாயிரம் கட்டுகிறான். இருந்தும் voltage சரியாக வருவதில்லை. இதற்கு மேல் வருடா வருடம் ஏற்ற வேண்டும் என்கிறாயே நாங்கள் என்ன தான் செய்வது? திருட்டைத் தடுக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு மின்சாரம் இழுக்கப் படுகிறது. ஆனால் நாணல் மட்டும் வருடா வருடம் அதிக கட்டணம் தர வேண்டும். இது என்ன நியாயம்?
Rate this:
Share this comment
Cancel
K. Rajan - Tirunelveli ,இந்தியா
19-ஜூன்-201213:21:42 IST Report Abuse
K. Rajan கேரளாவிலும் அரசு தான் மது விற்கிறது. அங்கு எல்லா பிராண்டு மதுகளும் விற்கப்படுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் குறிப்பிட்ட கம்பெனிகளின் மதுவைகள் தான் விற்கப்படுகின்றன. ஏது ஏன்? லஞ்சப்பணம் கைமாருகிறதா?
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜூன்-201212:11:42 IST Report Abuse
pattikkaattaan சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசு மானியம் கொடுத்து ஊக்கபடுத்த வேண்டும் ... ஏன் அரசு அதை செய்ய முன்வரவில்லை ... அவ்வாறு செய்தால் தனக்கு வருமானம் பாதிக்கப்படும் என்பதாலா?..
Rate this:
Share this comment
Cancel
Sathyan - tirupur,இந்தியா
19-ஜூன்-201210:32:08 IST Report Abuse
Sathyan ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் மாதா மாதம் மின் பயனீட்டு அளவை எடுக்க யோசிப்பார்களா ? அனைத்து செலவினங்களும் மாதமொருமுறை செய்யும் போது மின்கட்டணம் மட்டும் இரண்டு மாதத்திட்ட்கு ஒருமுறை எடுத்து மக்களை மேலும் பணச்சுமைக்கு அளாக்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
19-ஜூன்-201209:05:51 IST Report Abuse
வைகை செல்வன் அதே போல மத்திய மின்சாரத் தீர்ப்பாயத் தலைவர் பதவியையும் வருஷம் ஒருமுறை மாற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
19-ஜூன்-201208:42:52 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN எப்படி தான் இப்படி பேச வாய் வருகிறதோ. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ, போன்ற கதை போல் உள்ளது. நாற்பது வருஷம் திருடிவிட்டு, ஒரே சமயத்தில் நூறு சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்திய சாதனையை என்னவென்று சொல்வது. இன்னும் திருட்டை கட்டுப்படுத்த வேலை செய்யவில்லை, பேச்சு வேற.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
19-ஜூன்-201208:24:02 IST Report Abuse
Narayanan Gopalan கட்டணங்களை மாற்றி அதாவது ஏற்றி அமைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது தவறு. பகிர்வுகளில் ஏற்படும் நஷ்டம்,உடைந்த உருப்படாத உபகரணங்கள்,திருட்டு ஊழியர்கள்,திருட்டு அதிகாரிகள் திருட்டு விவசாயிகள்,திருட்டு அரசியல் வாதிகள்,அரசு கூட்டங்களுக்கு அனாவசிய மின்செலவு இவைகளை முற்றிலுமாக அறவே நீக்கிவிட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் கட்டண உயர்வு செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201208:11:15 IST Report Abuse
rajan ஆண்டுக்கு ஆண்டு ஏன் விலை எத்துறீங்க.. தினமும் காய்கறி சந்தை மாதிரி காலைல வானொலில மின்சார விலைய அறிவித்து விடவேண்டியது தானே. அவனவன் தேவைக்கு எத்த மாதிரி மெயின் ஆப் பண்ணி வச்சுக்குவானுகல்ல. கூத்தும் ரொம்ப நல்லாவே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்