district news | நீலகிரியில் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பில் தெளிவில்லை! | Dinamalar
Advertisement
நீலகிரியில் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பில் தெளிவில்லை!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஊட்டி: "நீலகிரியில் அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு, முழுமை பெறாத நிலையில் உள்ளது; குறைகளை களைய கேபிள் "டிவி' வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


நீலகிரியில் கேபிள் "டிவி'க்கள் அரசுடைமையாக்கப்படுவதற்கு முன் கேபிள் கட்டணமாக மாதம் 100 - 150 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. கேபிள் "டிவி' அரசின் கட்டுப்பாட்டில் வந்த பின், மாத கட்டணமாக 70 ரூபாய் செலுத்தினால் போதும், என அரசு அறிவித்தது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிக்கும் 70 ரூபாயில், 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்.

இருப்பினும், பல இடங்களில் 80 - 150 ரூபாய் வரை கேபிள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. "நீலகிரியில் மொத்தம் 84 ஆயிரம் இணைப்புகள் உள்ளன; இணைப்புகளை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என அரசு கேபிள் "டிவி' தாசில்தார் கூறினார்.

இது ஒரு புறமிருக்க, நகர்புறங்கள் அல்லாத ஒதுக்குப்புற கிராமங்களில் கேபிள் "டிவி' ஒளிபரப்பில் துல்லியத்தன்மை இல்லை, என்ற குறைபாடு உள்ளது. கடந்த இரு நாளுக்கு முன் ஊட்டியில் உள்ள கேபிள் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்ய வந்த மாநில கேபிள் "டிவி' வாரிய தலைவர் ராதாகிருஷ்ணனிடம், அருவங்காடு - எல்லநள்ளி இடைப்பட்ட பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சில குறைகளை முன்வைத்தனர்.

அதில்,"குன்னூர் கேபிள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறும் இணைப்பின் ஒளிபரப்பில் துல்லியத்தன்மை இல்லை; 20க்கும் மேற்பட்ட சேனல்கள் ஒளிரப்பாவது இல்லை; "டிரான்ஸ்மிட்டர்' உட்பட கருவிகளை பொருத்துவதிலும் சில நிர்வாக சிக்கல்கள் உள்ளன; மின் கம்பங்களை ஒட்டியவாறு கேபிள் ஒயர்களை கொண்டு செல்ல மின்வாரியம் அனுமதி மறுத்து வருகிறது; ஆங்காங்கே, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன,' என்ற குற்றச்சாட்டுகளை கூறினர்.
""குன்னூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் ஒளிபரப்பில் துல்லியத்தன்மை இல்லையென்றால், ஊட்டி கேபிள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இணைப்பை எடுத்து கொள்ளுங்கள்,'' எனக் கேபிள் "டிவி' வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். "இதற்கு, சுமார் 18 கேபிள் ஆப்பரேட்டர்களும் தலா 6,000 ரூபாய் வரை கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது,' என, கேபிள் ஆபரேட்டர்கள் கூறினர்.

இதே போன்று மாவட்டத்தின் பல இடங்களில் பல நிர்வாக சிக்கல்களை கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கேபிள் "டிவி' ஆபரேட்டர்களிடமும் கலந்தாய்வு நடத்தி அவர்களது குறைகளை களைய வேண்டும். அதேபோல, "கேபிள் இணைப்பு கட்டணத்தை பெறும்போது, கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்,' என்ற உத்தரவையும் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கேபிள் நிர்வாகங்கள் பற்றிய பட்டியலை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கான நடவடிக்கையை அரசு கேபிள் வாரிய மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்