Hypertension | மக்களை மிரட்டும் மன அழுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை மிரட்டும் மன அழுத்தம்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (12)
Advertisement

மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மன அழுத்தத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்: தலைவலி, மயக்கம், பயம், எரிச்சல், கோபம், பீதி, ஏ.டி.டி.,/ ஏ.டி.எச்.டி., நோய் ஆகியவை ஏற்படுகின்றன. பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தல், பக்கவாதம், இதயநோய்கள், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னை, வயிற்று எரிச்சல், அடி வயிற்று வலி, குடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்து, ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம், நார்த் திசுக்கட்டி, வலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல், விபரீத எண்ணம், விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, பழக்கவழக்கத்தில் மாற்றம், உணர்வுப்பூர்வமாக மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ஆஸ்துமா, அல்சர், சத்துக் குறைபாடு, டென்ஷன், பதட்டம், பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வருகிறது. இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் சாதாரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதல்படி: சிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மை, முயற்சி, சக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்: மன அழுத்தம், நல்ல அறிவு படைத்தவர்களையும், பழக்கவழக்கம், நடை, உடை, பாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்: மனித உணர்வில், பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில், தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில், மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவது: அவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல், அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில், அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனே சரிசெய்யுங்கள்: பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போது, எண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

மாறும் இதயத்துடிப்பு: சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பு எப்படியிருக்கும், மனஅழுத்தத்தின் போது எப்படியிருக்கும் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறது. மனஅழுத்தத்தின் போது இதயத்துடிப்பு வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகிறது. பயம், பதட்டம், கோபம் ஆகியவை ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-201204:10:55 IST Report Abuse
sathish வாரத்துக்கு 4 நாட்கள் விடுமுறை விட்டா மன அழுத்தம் வராது.......
Rate this:
Share this comment
Cancel
N Natarajan - kumbakonam,இந்தியா
19-ஜூன்-201221:15:27 IST Report Abuse
N Natarajan தினமலர் ரொம்ப நல்ல செய்தி தாள்
Rate this:
Share this comment
Cancel
N Natarajan - kumbakonam,இந்தியா
19-ஜூன்-201221:13:08 IST Report Abuse
N Natarajan இந்த செய்தி தாள் மிகவும் நன்றாக இருக்கிறது .நான் தினமும் வசிக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜூன்-201218:59:29 IST Report Abuse
Nallavan Nallavan செய்தியின் டைட்டிலில் ஆங்கிலத்தில் ஹைப்பர் டென்ஷன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதி உயர் ரத்த அழுத்தத்தைத் தான் அவ்வாறு குறிப்பிடுவார்கள் மெண்டல் டிப்ரஷன் என்பதே சரி
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201214:11:15 IST Report Abuse
Chandrasekaran தற்கால இளைங்கர்களின் மனோ நிலை அணுகும் முறை முற்றிலும் மாறி உள்ளது. பெரியவர்களை மதிக்கும் மனப்பாங்கு கொஞ்சம் கூட கிடையாது. மற்றவர்கள் மனம் புண் படும் படி பேசுகிறார்கள். அனுசரித்து போகும் எண்ணம் இருப்பது இல்லை. பெற்றோர்களும் குழந்தைகளை நன்றாக பக்குவ படுத்துவது இல்லை. மேலும் ஸ்திரமான வேலை இல்லாமை, என்று வேலை போகுமோ என்ற பயம், விலைவாசி, அளவுக்கு அதிகமான சொகுசு, கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பாங்கு குறைவாக உள்ளது, வீட்டில் உள்ள பெரியவர்கள் துளி கூட விட்டுகொடுத்து போகாமை, எல்லா விஷயங்களிலும் தலையிடுவது போன்றவையும் மன அழுத்ததிற்கு காரணம் ஆகிறது எனபது ஏன் கருத்து.
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
19-ஜூன்-201213:15:42 IST Report Abuse
GURU.INDIAN அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்பட காரணம் ? அவர்களுக்கு எப்படி லஞ்சம் வாங்குவது அதை எப்படி பதுக்குவது மாட்டிக்கொண்டால் எப்படி சமாளிப்பது இதே சிந்தனையில் இருக்கிறார்கள் . எப்படி நாம் சீக்கிரம் பணக்காரனாவது என்றுதான் அதிகம் யோசிக்கிறார்கள் . . இந்த நோய் குக்கிராமத்தில் வருவதில்லை. காரணம் அவர்கள் அன்றாடம் வேலைசெய்தாலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் எதைப்பத்தியும் சிந்திப்பது இல்லை .முக்கியமாக அடுத்தவனை எப்படி ஏமாற்றுவது என்று துளியும் சிந்திக்க மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
R.Santhanagopalan - chennai,இந்தியா
19-ஜூன்-201212:21:12 IST Report Abuse
R.Santhanagopalan அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படும். காரணம் அவர்களுக்கு பதவி உயர்வு சரியாக கொடுக்காததால்தான். இந்த தமிழக அரசு இதற்கு செவி சாய்க்குமா - சந்தானம், சென்னை.
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
19-ஜூன்-201213:19:01 IST Report Abuse
Sathyamoorthyஹலோ இது உண்மைக்கு புறம்பான கருத்து. பிரைவேட் கம்பெனியில் வேலை செய்வோருக்குதான் பிரஷர் அதிகம். ஏனெனில் அவர்களுக்கு வேலையின் மீது ஒரு பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். அரசு துறையில் அந்த கவலை இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Ganesh Maldives - maalththeevugal ,மாலத்தீவு
19-ஜூன்-201210:01:32 IST Report Abuse
Ganesh Maldives கூட்டு குடும்பங்கள் சோலைவனமாக இருந்தது, அவை தற்போது சிதைந்து, பிரிந்த தனி குடும்பங்கள் தனி மரமானது.., குழந்தைகள் தனி மர நிழல் கூட கிடைக்காமல் அலங்கோலமாய் திரிகிறது..., இது தான் மன அழுத்தத்தின் அடித்தளம்...,, இதை மற்றவர்க்கு எடுத்து சொன்னாலும் வெயில் மற்றும் அனல் அதிகமாக உள்ளதால் மனதில் ஏறாது...,
Rate this:
Share this comment
Cancel
K.Suresh Kumar - Chennai,இந்தியா
19-ஜூன்-201209:34:58 IST Report Abuse
K.Suresh Kumar எல்லாத்துக்கும் காரணம் மனித ஏற்றத்தாழ்வே, ஒவ்வுருவரும் பணக்காரன் ஆகா வேண்டும் என்பதே, முதலில் சமுகம் எல்லோரையும் சமமாக பார்த்தல் பெரும் மன அழுத்தம் குறையும். போதும் என்ற மனம் வேண்டும். அதுவே சரியான தீர்வு, அதே போல எல்லா நாடுகளை போல வர இறுதி 2 நாட்கள் விடுமுறை வேண்டும், குடும்பத்துடன் சந்தோசமாக பொழுது கழிக்க வேண்டும். தின கூலி ஆட்களும் விடுப்பு எடுக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
beemboy - Oslo,நார்வே
19-ஜூன்-201208:25:49 IST Report Abuse
beemboy எதை குறித்தும் கவலை கொள்ளாதீர்கள் என்பதை தெளிவாக சொல்கிறது ...நல்லது ... எந்த பிரச்னை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள் கவலை கொள்வதால் பிரச்னை தீர போவதில்லை ...ஆகவே முயன்ற வரை சந்தோசமாக வாழ பழகி கொள்ளுங்கள்..... :) மறக்காமல் காமெடி நிகழ்ச்சியை பாருங்கள் :) உங்கள் கவலை போய்விடும் :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை