harbour joint road will come soon | துறைமுக இணைப்புச் சாலை விரிவாக்கம் குறித்த காலத்திற்குள் முடியும்| Dinamalar
Advertisement
துறைமுக இணைப்புச் சாலை விரிவாக்கம் குறித்த காலத்திற்குள் முடியும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : ""சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைப் பணிகள், திட்டமிட்டபடி, அடுத்த ஆண்டு ஜூனில் முடியும். அதற்கேற்ப பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன,'' என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். சென்னைத் துறைமுகத்திற்கு வந்து செல்லும், சரக்குப் பெட்டக லாரிகளால் நெரிசல் ஏற்பட்டு, வடசென்னை சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்குத் தீர்வுகாணும் வகையில், 600 கோடி ரூபாயில், சென்னை - எண்ணூர் துறைமுகங்கள் இணைப்புச் சாலைத் திட்டம், துவக்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் முடங்கிய இந்தப் பணிகள், கடந்த ஆண்டில் வேகம் பிடித்தன. தற்போது, துறைமுக கட்டுப்பாட்டில், மீன்பிடி துறைமுகப் பகுதி தவிர, மற்ற பகுதிகளில் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், நேற்று அதிகாலை சென்னைத் துறைமுகம் வந்தார். வாயில்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ள ஜீரோ கேட், மீன்பிடி துறைமுகப் பகுதி, எண்ணூர் வரையில், சாலை விரிவாக்கப் பணிகளையும் ஆய்வு செய்தார். துறைமுகத் தலைவர் அதுல்யமிஸ்ரா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி மோகன் உள்ளிட்டோர், பணிகள் குறித்து விளக்கமளித்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் வாசன் கூறியதாவது: பல்வேறு தடைகளைத் தாண்டி, துறைமுக இணைப்புச் சாலைப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மீன்பிடி துறைமுகப் பகுதியில், மீனவர்களுக்கு மாற்றுக் கடைகள் ஒதுக்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன், 86 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 66 பேருக்கு, ஒரு வாரத்தில் கடைகள் வழங்கப்பட்டு விடும். பவானியம்மன் கோவிலை அகற்ற, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில், அவை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, இடம் ஒப்படைக்கப்படும். மாநில அரசு, துறைமுங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கூட்டு முயற்சியாக, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக, சென்னைத் துறைமுகம் வழங்க வேண்டிய, 139.80 கோடி ரூபாயில், 67 கோடி ரூபாயும், எண்ணூர் துறைமுகம் தரவேண்டிய, 34.03 கோடி ரூபாயில், 17.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும். துறைமுக இணைப்புச் சாலைப் பணிகள், அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்திற்குள் திட்டமிட்டபடி முடியும். சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்தால்தான், இந்தப் பகுதியில் இருந்து வரும் நெரிசல் பிரச்னைக்கு நிரந்தத்தீர்வு கிடைக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்