band for sand taking in kosos thalai river : court notice to government | கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்கத் தடை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | Dinamalar
Advertisement
கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்கத் தடை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்கத் தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. விளாப்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: கெருகம்பூண்டி கிராமத்தில், மணல் குவாரிக்கு பொதுப் பணித் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன் அருகில் உள்ள திருக்கனஞ்சேரி, அரும்பாக்கம், வெம்பேடு, மேல்செம்பேடு கிராமங்களிலும் மணல் எடுக்கின்றனர். இந்த கிராமங்கள் எல்லாம், கொசஸ்தலை ஆற்றை நம்பியுள்ளது. விவசாயம், குடிநீருக்கு இந்த ஆற்றின் நீர் ஆதாரத்தை நம்பியுள்ளனர். 30 அடியில் இருந்த நீர் ஆதாரம், 100 அடிக்கு சென்றுள்ளது. 2,000 யூனிட் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மூன்று லட்சம் யூனிட்டுக்கு மேல் மணல் எடுத்துள்ளனர். கிராம மக்கள் தர்ணா: சட்டவிரோத மணல் குவாரி நடப்பதைக் கண்டித்து, கிராமத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிச் சந்தையில் ஒரு யூனிட் மணல் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஒரு யூனிட் மணலுக்கு 330 ரூபாய் என ரசீது கொடுக்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் கெருகம்பூண்டி, திருக்கனஞ்சேரி, அரும்பாக்கம், வெம்பேடு, மேம்செம்பேடு கிராமங்களில் கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். ஆற்றில் எந்த அளவுக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வுசெய்ய, உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு உத்தரவு: மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.ராஜமோகன் ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்