gundas on ex minister veerapandi : d.m.k ministers are in fear | வீரபாண்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (5)
Advertisement
வீரபாண்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

சேலம் : ரவுடிகளை ஏவி விட்டு, சேலம் அங்கம்மாள் காலனியில், குடிசைகளை எரித்த வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் மீது, நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, இரண்டாவது தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இதனால், பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது, 2011 ஜூலை 15ல், அங்கம்மாள் காலனி நிலத்தை மோசடி செய்ததாக, எட்டு பிரிவின் கீழ், முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூலை 17ல், சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்ததாக, ஒன்பது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூலை 29ல், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் நிலத்தை ஆக்கிரமித்ததாக, ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜூலை 30ல், முதல் முறையாக, வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் மீது, செப்., 4ம் தேதி, கோயமுத்தூர் ஜுவல்லரி உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவை சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை, மீண்டும் இரண்டாவது முறையாக கைது செய்தனர். அக்., 6ம் தேதி, அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி வழக்கு, 14 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக, முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜேந்திரன் சேர்க்கப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,), முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயர் சேர்க்கப்படவில்லை. பின் நடந்த புலன் விசாரணையில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், 2012 ஜூன் 2ம் தேதி, நள்ளிரவு 12.45 மணிக்கு, அங்கம்மாள் காலனிக்குள் புகுந்த ரவுடிகள், குடிசையை அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தினர். இந்த செயல்களில், ரவுடிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக, வீரபாண்டி ஆறுமுகம் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார், ஜூன் 4ம் தேதி, சென்னையில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ரவுடிகளுடன் இணைந்து சதி செய்து, அங்கம்மாள் காலனி குடிசைகளை எரித்ததாக, வீரபாண்டி ஆறுமுகத்தை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, கமிஷனர் மாஹாலி நேற்று பிறப்பித்தார். சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்பு குழு இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஞானசேகரன், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர், குண்டர் தடுப்பு சட்ட கைதுக்கான உத்தரவை, நேற்று வேலூர் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். தமிழகத்தில், ஆட்சி மாற்றத்துக்கு பின் , முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முதலாவதாக கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால், பல்வேறு வழக்குகளில் சிக்கி, சிறை சென்று ஜாமினில் வெளியில் உள்ள, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manohar - Trichy,இந்தியா
20-ஜூன்-201200:29:51 IST Report Abuse
Manohar சேலம் மாவட்டமே சந்தோஷத்தில் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
dharma - nagpur,இந்தியா
19-ஜூன்-201207:41:32 IST Report Abuse
dharma குண்டன் மீது குண்டர் சட்டம் தான் பாயும் வேறென்ன தியாகி சட்டமா பாயும்
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201207:25:18 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் பல குடும்பஸ்தரை இப்படி குண்டராக்கினா,குடும்பங்கள் வருந்தாதா? குடும்பமே இல்லாத ஜெயாவுக்கு இது புரியுமா?,
Rate this:
Share this comment
Cancel
GANESAN NAGANATHAN - trichy,இந்தியா
19-ஜூன்-201206:56:39 IST Report Abuse
GANESAN NAGANATHAN உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆகணும். தப்பு செய்தால் தண்டனை அடைந்துதான் ஆகணும் இது கடவுள் தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Komberi Mookkan - Atlanta ,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201201:11:53 IST Report Abuse
Komberi Mookkan வீரபாண்டி-னா என்ன கொக்கா? தப்பு பண்ணினா யாரா இருந்தாலும் தட்டி வைக்க வேண்டியது தான். இது தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, என எல்லாக் கட்சிக்காரனுக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை