new representative will send to delhi | டில்லிக்கு புது பிரதிநிதி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லிக்கு புது பிரதிநிதி?

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி, நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, பள்ளிப்பட்டு நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக, திருவாரூர் அசோகன் நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2001-06 ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2006ம் ஆண்டு இறுதியில், தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய சிறப்பு பிரதிநிதியாக, பள்ளிப்பட்டு நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர், கடந்த அ.தி.மு.க,. ஆட்சியில், கொறடாவாக பணியாற்றியவர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை