land forgaury case : again d.m.k secratary thalapathi arrested | நில அபகரிப்பு வழக்கில் மீண்டும் : தி.மு.க., செயலர் தளபதி கைது| Dinamalar

நில அபகரிப்பு வழக்கில் மீண்டும் : தி.மு.க., செயலர் தளபதி கைது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
நில அபகரிப்பு வழக்கில் மீண்டும் : தி.மு.க., செயலர் தளபதி கைது

மதுரை : மதுரையில், மில் பணியாளர்களுக்கான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக, நேற்று தி.மு.க., நகர் செயலர் தளபதி,57, மீண்டும் கைது செய்யப்பட்டார். மதுரை தியாகராஜர் காலனியில், மலைச்சாமி என்பவரது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக, தளபதி, அவரது மைத்துனர் வெங்கடேசன் மற்றும் உடந்தையாக இருந்த மில் நிர்வாகி மலையரசன் உட்பட 4 பேரை, ஜூன் 12ல் நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், ஜூன் 16ல், ஜாமின் பெற்ற தளபதி, மதுரை முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை கையெழுத்திட்டு வந்த அவரை, கோர்ட்டிற்கு வெளியே மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் கைது ஏன்? மதுரை மீனாட்சி மில் தொழிலாளர்களுக்காக, அதன் நிர்வாகம் தியாகராஜர் காலனியில், மத்திய, மாநில அரசிடமிருந்து 14 ஏக்கர் நிலம், தனியாரிடம் 9 ஏக்கர் நிலம் பெற்று குடியிருப்புகள் அமைத்தது. விளையாட்டு மைதானம், பூங்கா, பள்ளிக்கூடத்திற்கு நிலம் ஒதுக்கியது. அரசிடமிருந்து பெறப்பட்ட மேற்கண்ட இடங்களில், மாற்றம் செய்தாலோ, விற்றாலோ அரசின் அனுமதி பெறவேண்டும் என்றும், மில்லை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
தளபதிக்கு விற்பனை : இந்நிலையில், 1995ல், "ஜி.எச்.சி.எல்.' என்ற நிறுவனம், மில் நிர்வாகத்தைக் கவனித்தது. இதன் இயக்குனர்கள் ஜலான், சிவபாலசுப்பிரமணியன், நிதிப்பிரிவு மேலாளர் சீனிவாசன், பொது மேலாளர் மலையரசன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து, சீனிவாசன், நீரஜ் ஜலான் என்பவர்களுக்கு, அரசின் அனுமதி பெறாமல், பொது இடத்திற்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தனர். பின், போலி ஆவணம் மூலம் தி.மு.க., நகர் செயலர் தளபதி பங்குதாரராக உள்ள "ஜாட் ரியல் எஸ்டேட்' என்ற நிறுவனத்திற்கு 1.64 கோடி ரூபாய்க்கு விற்றனர். பொது இடத்தை 94 பிளாட்டுகளாகப் பிரித்து, அதில் 7 பிளாட்டுகளுக்கு மட்டும் வரைபட அனுமதி பெற்றனர். மீதமுள்ள 87 பிளாட்டுகளை வரைபட அனுமதியின்றி, ஒரு சென்ட் ரூ.3 லட்சத்திற்கு வெளிநபர்களுக்கு விற்றனர். கடந்த 2008ல் தளபதி, மற்றொரு பங்குதாரர் ஆறுமுகச்சாமி ஆகியோர், தொழிலாளர் பூங்காவிற்கான 34 சென்ட் இடத்தை திருப்பரங்குன்றம் கிருஷ்ணசாமி என்பவருக்கு பவர் கொடுத்தனர். பின், தனது மனைவி சாவித்திரிக்கு, ரூ.14.95 லட்சத்திற்கு தளபதி கிரையம் செய்தார். வரைபட அனுமதி பெற்ற 7 பிளாட்டுகளில், சாவித்திரி பெயரில் திருமண மண்டபத்தைக் கட்டினார். இதுகுறித்து, மில் நிர்வாகத்தின் முன்னாள் பணியாளர்கள் சங்க உதவிச் செயலர் பலராமன், நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். நேற்று தளபதி, மைத்துனர் வெங்கடேசன்,40, தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரன், திருப்பரங்குன்றம் நகர் செயலர் கிருஷ்ணபாண்டி மற்றும் மில் நிர்வாகி மலையரசனை, மோசடி உட்பட 8 பிரிவுகளின்கீழ், போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், ""இவ்வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கிறோம். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.