raja's travelling was taken in video : public getts agitaiton | "ராஜாவின் பயணம் வீடியோவில் பதிவு : சினிமா "ஷூட்டிங்' என்று மக்கள் வேடிக்கை| Dinamalar

"ராஜாவின் பயணம் வீடியோவில் பதிவு : சினிமா "ஷூட்டிங்' என்று மக்கள் வேடிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ராஜாவின் பயணம் வீடியோவில் பதிவு : சினிமா "ஷூட்டிங்' என்று மக்கள் வேடிக்கை

திருச்சி : "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கைதாகி சிறையிலிருந்து, ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பயணம், பாதுகாப்பு காரணத்துக்காக, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருச்சி வந்தனர். ராஜாவும், துரைமுருகனும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க வருவதாக இருந்தது. ஆனால், துரைமுருகன் மட்டும் திருச்சி மத்திய சிறைக்கு சென்று பெரியசாமியை சந்தித்தார். ராஜா கார் மூலம் பெரம்பலூருக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை வரவேற்று திருச்சி மாநகர் பகுதியின் பல இடங்களில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. சில இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். பாதுகாப்பு காரணங்களால் அவரது பயணத்தை டாடா சுமோ காரின் மேற்கூரையில் அமர்ந்து, இரண்டு பேர் வீடியோவில் பதிவு செய்தபடி சென்றனர். திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் அருகே, ராஜாவின் காரை பின்தொடர்ந்து வந்த அவரது ஆதரவாளர்கள், "ஒதுங்கு... ஒதுங்கு...' என்று மக்களை விரட்டியபடி வந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஏதோ சினிமா ஷூட்டிங் என்று எண்ணி வேடிக்கை பார்த்தனர். பிறகு "ஸ்பெக்ட்ரம்' ராஜா செல்கிறார் என்பதைத் தெரிந்ததும், "அடக்கொடுமையே' என்று தலையில் அடித்துக் கொண்டனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜூன்-201207:47:57 IST Report Abuse
Pannadai Pandian தமிழ்நாட்டில் ஆ.ராசா இப்படி சஞ்சரித்தால் ஆபத்து கண்டிப்பாக உண்டு. மரியாதையாய் டெல்லி சென்றுவிடுவது உசிதம். முடிந்த வரை பாராளுமன்றம், வளாகத்திலேயே சுற்றி திரிவது பாதுகாப்பு அவருக்கு. சொன்னா கேப்பாரா ? நண்டு கொழுத்தா வளைய விட்டு வெளியே வந்துரும் வெளியே ஒரு கிழ நரி டயம் பாத்துட்டு இருக்குன்னு நண்டுக்கு தெரியில.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
19-ஜூன்-201207:13:47 IST Report Abuse
ஆரூர் ரங ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பு ராசா திஹாருக்குத் திரும்புவது நல்லது. நண்பர் சாதிக்கின் கதி அவருக்கு நினைவிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Muthuraman Nallasamy - Maryland,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201206:48:12 IST Report Abuse
Muthuraman Nallasamy அட கடவுளே இந்த ஜெயில் பறவை ராஜாவுக்கா இவ்வளவு பரபரப்பு ...ஒன்றா இரண்டா ...ஒரு லக்ஷம் எழுவத்தி ஆறாயாயிரம் கோடி ரூபாயல்லவா ....மலைமுலுங்கி மகாதேவன் ராசா ...
Rate this:
Share this comment
Cancel
Vijay - chennai,இந்தியா
19-ஜூன்-201202:29:44 IST Report Abuse
Vijay காரின் மேற்கூரையில் அமர்ந்து, இரண்டு பேர் வீடியோவில் பதிவு செய்தபடி சென்றனர். திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் அருகே, ராஜாவின் காரை பின்தொடர்ந்து வந்த அவரது ஆதரவாளர்கள், "ஒதுங்கு... ஒதுங்கு..." என்று மக்களை விரட்டியபடி வந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஏதோ சினிமா ஷூட்டிங் என்று எண்ணி வேடிக்கை பார்த்தனர். பிறகு "ஸ்பெக்ட்ரம்" ராஜா செல்கிறார் என்பதைத் தெரிந்ததும், "அடக்கொடுமையே" என்று தலையில் அடித்துக் கொண்டனர்......... நல்ல காமெடி...... ஆண்டிமுத்து ராஜா தற்போது மக்கள் மத்தியில் "ஸ்பெக்ட்ரம்" ராஜாவாக உருவெடுத்திருப்பது ஒரு நல்ல விழிப்புணர்வு & நல்ல காமெடி..... செய்தியை படித்த பின் பலத்த சிரிப்பு வந்தது...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.