again vitness starts for the case of school childs murder | பள்ளி குழந்தைகள் கொலை வழக்கு மீண்டும் சாட்சி விசாரண துவக்கம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பள்ளி குழந்தைகள் கொலை வழக்கு மீண்டும் சாட்சி விசாரண துவக்கம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : அடுத்தடுத்து நான்கு வழக்கறிஞர்கள் விலகலைத் தொடர்ந்து, தடைபட்டிருந்த பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கின் சாட்சி விசாரணை, நேற்று மீண்டும் துவங்கியது. கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரியின் குழந்தைகள், முஸ்கின், ரித்திக். பள்ளி வாகனத்துக்காகக் காத்திருந்தபோது, இருவரும் வேனில் கடத்தப்பட்டு, உடுமலை அருகே, பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கின் சாட்சி விசாரணை, கோவை மகளிர் கோர்ட்டில் நடக்கிறது. 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தனக்காக ஆஜராகும் வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்ட மனோகரன், கோர்ட்டில் தெரிவித்தான். இதனையடுத்து, சட்ட மையத்தால் நியமிக்கப்பட்ட, வழக்கறிஞர் இருதயராஜ் மாற்றப்பட்டார். அடுத்தடுத்து, நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், வடிவேல், கலைச்செல்வன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில், ஆஜராக இயலாது எனக் கூறி, வழக்கில் இருந்து விலகிக் கொண்டனர். இறுதியாக, சில நாட்களுக்கு முன், பெண் வழக்கறிஞர் சர்மிளா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் சார்பில், ஆஜராக நியமிக்கப்பட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் சர்மிளா, கோர்ட்டில் ஆஜரானார். சில சாட்சிகளை, மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய, அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை வரும் 27க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை