board president ger notice for waste water mix with the kavery river | காவிரியில் கலக்கும் கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு, "நோட்டீஸ்' | Dinamalar
Advertisement
காவிரியில் கலக்கும் கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு, "நோட்டீஸ்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம், 31ம் தேதி, ஆங்கில நாளிதழ் ஒன்றில், காவிரி நீர் மாசுபடுவது குறித்து, செய்தி வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "ஈரோடு மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரியில் கலக்கிறது. அதோடு, சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளாலும், காவிரி நீர் அசுத்தம் அடைந்து வருகிறது. இதை தடுக்க, ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், ஜெயந்தி பிறப்பித்துள்ள உத்தரவில், "இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர், மூன்று வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 28,2016

செப்டம்பர் 28,2016