ravanan gets again trouble | ராவணனுக்கு மீண்டும் சிக்கல்?| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராவணனுக்கு மீண்டும் சிக்கல்?

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராவணன் மீதான நிபந்தனை ஜாமின் உத்தரவை மீறியதால், ராவணனிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. திருப்பூர் இரும்பு வியாபாரி கிருஷ்ணமூர்த்தியிடம், மணல் குவாரி லைசென்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் ராவணன் பெற்றுக் கொண்டுள்ளார். புகாரின் பேரில், ராவணனை போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதே நேரத்தில், பல்வேறு இடங்களிலும், இவர் மேல் மோசடி வழக்குகள் பதிந்திருந்தன. இந்த வழக்கில், ஆலந்தூர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன் மூலம் வெளியே வந்த ராவணன், இவர் மேல் போடப்பட்ட பல்வேறு வழக்கையும் சேர்ந்து, நிபந்தனை ஜாமின் உத்தரவுப்படி, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கையொப்பம் போட்டு வந்தார். ஆனால், ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவுப்படி கையொப்பம் போடவில்லை என, மேட்டுப்பாளையம் நீதிமன்றம், ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது. அதற்கு, ராவணன் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. விரிவான விளக்கம் அளிக்க, ராவணன் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார். அதன்பேரில், வரும் 21ம் தேதியில் வழக்கு மாற்றப்பட்டது. சரியான விளக்கம், நீதிமன்றத்தில் தெரிவிக்காதபட்சத்தில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை