radiogralphy vaccancy order gets stay in court | "ரேடியோகிராபர்' பணி நியமனம் தடைகோரி வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

"ரேடியோகிராபர்' பணி நியமனம் தடைகோரி வழக்கு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : அரசு மருத்துவமனைகளில், மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர் (ரேடியோகிராபர்) பணி நியமனத்திற்குத் தடைகோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், 243 "ரேடியோகிராபர்' பணியிடங்களை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்காக, 945 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி வரை, இப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில், ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில், "ரேடியோகிராபர்'களாகப் பணிபுரிபவரில் சிலரும், அங்கீகரிக்கப்படாத பயிற்சி நிறுவனங்களில், "ரேடியோகிராபர்' சான்றிதழ் படிப்பை முடித்த பலரும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். எனவே, இப்பணி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, அரசு மருத்துவக் கல்லூரிகளில், "ரேடியோகிராபர்' சான்றிதழ் படிப்பு பயின்ற, 15 பேர், ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை