lady doctor is the job of reader : notice for medical college | "ரீடர்' பணிக்கு பெண் டாக்டர்? மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ் | Dinamalar
Advertisement
"ரீடர்' பணிக்கு பெண் டாக்டர்? மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையில் "ரீடர்' பணிக்கு, பெண் டாக்டரை தேர்ந்தெடுக்கத் தடைகோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த ஐகோர்ட், தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வராக பாலகுருசாமி என்பவர் உள்ளார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: இரண்டு "ரீடர்க'ள், ஒரு பேராசிரியர் பணியிடங்களுக்கு, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. "ரீடர்' பணிக்கு, முதுகலை சித்த மருத்துவம் மற்றும் உதவிப் பேராசிரியராக, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு, கடந்த மாதம், 21ம் தேதி நடந்தது. நான் கலந்து கொண்டேன். டாக்டர் கே.எஸ்.உமா என்பவரும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். ஆனால், "ரீடர்' பணிக்கான தகுதியை அவர் பெற்றிருக்கவில்லை. அந்தப் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு, 40. டாக்டர் உமாவின் வயது, 47. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை அவர் பெற்றிருக்கவில்லை. அந்தப் பணியில் அவரை நியமிக்க, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே, "ரீடர்' பணியில் உமாவை நியமிக்க தடை விதிக்க வேண்டும். தகுதியற்ற நபர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை தற்போதைய நிலை தொடரவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016