right from information act will applied for the temple also | கோவில்களுக்கும் தகவல் உரிமை சட்டம் செல்லும் : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு| Dinamalar
Advertisement
கோவில்களுக்கும் தகவல் உரிமை சட்டம் செல்லும் : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கும் கோவில்கள் என்றாலும், அதன் நடவடிக்கைகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொருந்தும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் வெங்கீஸ்வரர் அழகர்பெருமாள் மற்றும் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இக்கோவிலுக்கு பொது தகவல் அதிகாரியை நியமிக்கும்படி, இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கையை பிறப்பித்தது. எதிர்ப்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு, கால தாமதமாக தகவல் தரப்படுகிறது என புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இந்தச் சுற்றறிக்கையை கடந்த மார்ச் மாதம், இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவில், "இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில் என்றாலும், பொது ஆணையத்தின் நிர்வாகப் பிரிவு அல்ல. எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோவிலை கொண்டு வர முடியாது' என கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
பணம் வசூல் கோவில் என்பது ஒரு பொது நிறுவனம். ஒரு கோவிலை பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கின்றனர் என்பதற்காக, அந்தக் கோவிலின் பொது குணாதிசயங்கள் மறைந்து விடாது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோவில்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. கோவில் நடவடிக்கைகளுக்காக பொது மக்களிடம் இருந்து பணம் திரட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோவில்களை நிர்வகிப்பதற்காக கணிசமான பணத்தை அரசு செலவிடுகிறது. அவ்வப்போது கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும், கோவில்களை புனரமைக்கவும், அரசு நிதி உதவி வழங்குகிறது. அப்படியிருக்கும் போது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்காக, கோவில் ஒரு தனிப்பட்ட நிறுவனம் எனக் கூற முடியாது. அரசின் நிதி உதவியால் நடக்கும் தனி அமைப்புகளுக்கு கூட, தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொருந்தும். எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டம், கோவில்களுக்கு பொருந்தும் என்கிற போது, அந்தக் கோவிலில் ஒரு பொது தகவல் அதிகாரியை நியமிக்க வேண்டும். செல்லும் கோவில் அறங்காவலர்கள் அல்லது அறங்காவல் குழுவிடம் தான் தகவல்கள் இருக்கும். அறங்காவலர்களிடம் இருந்து தகவல்களை பெற்று, பின்னர் அதை தகவல் கோருபவர்களுக்கு நிர்வாக அதிகாரி தெரிவிக்க வேண்டும் என்பது அதிகபட்சமானது. எனவே, இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்