rules exceeds ont the sand dicking in kavery river : collector must answer this : order | காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதில் விதி மீறல் : கலெக்டர்கள் பதிலளிக்க உத்தரவு| Dinamalar
Advertisement
காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதில் விதி மீறல் : கலெக்டர்கள் பதிலளிக்க உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : காவிரி ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதில் விதிமீறல் நடப்பதால், மணல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், திருச்சி உட்பட, ஐந்து மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஈரோடு காவிரி நீர்ப்பாசன ஆதார பாதுகாப்பு சங்க செயலர், மகேந்திரகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: காவிரி ஆறால், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர் மாவட்ட விளை நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன; குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில், 42 இடங்களில், மணல் அள்ள, அரசு உரிமம் வழங்கியுள்ளது. ஆற்றில், ஒரு மீட்டர் ஆழத்திற்கு தான், மணல் எடுக்க வேண்டும். விதியை மீறி, 10 மீ., ஆழத்திற்கு தோண்டி, மணல் அள்ளுகின்றனர். பொக்லைன் இயந்திரங்கள், இரண்டுக்கு பதிலாக, ஐந்து இயந்திரங்களைக் கொண்டு, லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். காவிரி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில், மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், "மணல் குவாரிகளில், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை, கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். தினமும் இரவு 7 முதல், மறுநாள் காலை 6 மணி வரை, மணல் எடுக்க அனுமதிக்கக் கூடாது' என, இடைக்கால உத்தரவிட்டனர். கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சிவசாமி, "கரூர் காவிரி ஆற்றுப் படுகை, திண்டுக்கல், வாங்கல் மணல் குவாரியிலும், 10 அடி ஆழத்திற்கு தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. இதனால், நீரூற்றுகள் பாதிக்கின்றன; மரங்கள் கருகி விட்டன' என, மற்றொரு மனு தாக்கல் செய்தார். திருச்சி மக்கள் சக்தி இயக்க அமைப்பாளர் சண்முகம், அன்பில் அரசு மேல்நிலை பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியன், "லால்குடி அருகே அன்பில், கல்லணையிலும், காவிரி, அமராவதி ஆற்று கால்வாய்களிலும், மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்' என, மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று, இம்மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், "கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர் கலெக்டர்கள் ஆய்வு செய்து, ஜூன் 29க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே, இடைக்கால உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். விசாரணை, ஜூலை 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்