xerox of the indai -russia aggreement produce on the court : court order | இந்திய - ரஷ்ய ஒப்பந்தத்தின் நகல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இந்திய - ரஷ்ய ஒப்பந்தத்தின் நகல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு, இந்தியா - ரஷ்யா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகலை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை தொடர்பாக, இரண்டு குழுக்கள் அளித்த அறிக்கையின் நகல்களையும் தாக்கல் செய்ய, ஐகோர்ட் உத்தரவிட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் 15க்கும் மேற்பட்ட பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணையில் இருந்தது. மத்திய அணுமின் சக்தித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அதில், "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது. நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செர்னோபில், புகுஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்துகள் போல், இங்கு நடக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கை, நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இவ்வழக்கு நேற்று "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், தமிழக அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை ஆஜராகினர். நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, இந்திய அரசுக்கும், அப்போதைய ரஷ்ய அரசுக்கும் 1988ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் நகலை, மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக, இரண்டு குழுக்கள் அளித்த அறிக்கையின் நகல்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளது. உத்தரவு இதையடுத்து, நீதிபதிகளின் பார்வைக்காக அந்த ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்வதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் தெரிவித்தார். அணு மின் நிலையம் வெளியேற்றும் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கருதுவது பற்றி, விரிவான பதில் மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்யவும் "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை