dishour of the court by not arresting the actress | நடிகையை கைது செய்யாததால் கோர்ட் அவமதிப்பு: பைனான்சியர் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகையை கைது செய்யாததால் கோர்ட் அவமதிப்பு: பைனான்சியர் மனு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : காசோலை மோசடி வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையை கைது செய்யாததால், போலீசார் மீது, கோர்ட் அவமதிப்பு மனுவை, சினிமா பைனான்சியர் தாக்கல் செய்துள்ளார். சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. இவர், நடிகை சுவர்ணா என்பவருக்கு, நான்கு லட்சத்துக்கும் மேல் கடன் கொடுத்திருந்தார். "அண்ணன் ஒரு கோவில்' படத்தில் நடித்தவர், சுவர்ணா.வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், காசோலையை வழங்கியிருந்தார். அதை வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து, சுவர்ணா மீது, காசோலை மோசடி வழக்கை, போத்ரா தாக்கல் செய்தார். இவ்வழக்கில், நடிகை சுவர்ணாவுக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை அமல்படுத்தக்கோரி, ஐகோர்ட்டில், போத்ரா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், சுவர்ணாவை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அமல்படுத்தப்படவில்லை. எனவே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு மனுவை, போத்ரா தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாததால், போலீசார் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் கோரியுள்ளார். இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை