pothu news | பிடதி ஆசிரமத்தை கைப்பற்ற வலியுறுத்தி ரிஷிகுமார் சுவாமிகள் சாகும் வரை உண்ணாவிரதம் | Dinamalar
Advertisement
பிடதி ஆசிரமத்தை கைப்பற்ற வலியுறுத்தி ரிஷிகுமார் சுவாமிகள் சாகும் வரை உண்ணாவிரதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: "கர்நாடகத்துக்குள் நித்யானந்தாவை அனுமதிக்கக் கூடாது. பிடதி ஆசிரமத்தை அரசு கைப்பற்றி, நிர்வாக அதிகாரியை வைத்து, கவனிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வற்புறுத்தி, ரிஷிகுமார் சுவாமிகள், பெங்களூரு சுதந்திர பூங்காவில், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.


தன்னுடன் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று, கண்டிப்புடன் அவர் கூறியிருந்தார். இருந்தாலும், உண்ணாவிரதப் பந்தலில், அவருடன் ஏராளமானோõர் கலந்து கொண்டனர். மூன்றாவது நாளான நேற்று, ரிஷிகுமார் சுவாமிகள், திடீரென்று மயக்கமடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த, "108' ஆம்புலன்ஸ் வேனிலிருந்த டாக்டர்கள், சிகிச்சை அளித்தனர்.


பிடிவாதம்: சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சுவாமிகளை, உண்ணாவிரதத்தை கைவிடும்படி, ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். இருந்தும், உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று, சுவாமிகள் பிடிவாதமாக உள்ளார். அரசின் உறுதிமொழி கிடைக்கும் வரை, உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா சீடர் வள்ளி ராமநாதன் தாக்கல் செய்த, "ஹேபியஸ் கார்பஸ்' மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வள்ளி ராமநாதன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், "ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தா மீது சுமத்தப்பட்ட இரண்டு வழக்குகளிலும், ஜாமின் கொடுத்து உத்தரவிட்டது. ஆனால், பிடதி போலீசார், அவரை விடுதலை செய்யாமல், வேண்டுமென்றே வேறொரு வழக்கை, அவர் மீது தொடுத்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மூன்று நாட்களுக்கு முன், ராம்நகர் மாவட்ட எஸ்.பி., அனுபம் அகர்வாலுக்கு நோட்டீஸ் அளித்தது. உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


போலீஸ் அதிகாரி ஆஜர்: இதையடுத்து, ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனுபம் அகர்வால், உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதியிடம் அவர் கூறுகையில், ""நித்யானந்தா, மைசூரு சிறைச்சாலையிலிருந்து ஜாமின் பெற்று, மதுரைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்று விடப்பட்டார். தற்போது அவர், மதுரை ஆதீனத்தில் இருக்கிறார்,'' என்றார். இதையடுத்து, வள்ளி ராமநாதன் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடதியிலுள்ள நித்யானந்தா ஆசிரம முறைகேடுகள் குறித்த விசாரணையை, ராம்நகர் மாவட்ட மண்டல கமிஷனர் தலைமையிலான விசாரணைக்குழு விரைவில் துவக்கவுள்ளது.


ராம்நகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம் ரெட்டி கூறியதாவது: விசாரணைக்குழுவினர் இன்னும் இரு நாட்களுக்குள் விசாரணையைத் துவக்குவர். இந்த ஆசிரம நிலத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சமூக சேவை செய்வதாகக் கூறும் ஒருவர், ஆபாச வீடியோக்களை ஆசிரமத்தில் வைத்திருப்பது குறித்தும் விசாரணை நடத்துவர். ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் குறித்து போரன்ஸிக் லாபரட்டரி நிபுணர்கள் உதவியையும் கோரவுள்ளனர்.


வழக்கு பதிவு: வனத்துறை, வருவாய்த் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, காவல் துறை, தொழிலாளர் துறை, நிதித்துறை, சுகாதாரத்துறை ஆகியோரிடம் விசாரணையைத் துவக்கும் முன் ஆலோசனை நடத்தப்படும் என்றார். இதற்கிடையில், 1972ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1985ம் ஆண்டு போதை பொருள் தடுப்புச் சட்டங்களின் கீழ், ராம்நகர் போலீசார் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த, 2010 ல் நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த சோதனையின்போது, மிருகங்களின் தோல்கள், அறுபது கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மாத்திரைகள், கஞ்சா போன்றவைகளும் கைப்பற்றப்பட்டன. இது குறித்து, போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஆசிரம ரெய்டுகள் முடிவடைந்துள்ளன. ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்டவை குறித்து விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்த பின்னரே, நித்யானந்தாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 26,2016

செப்டம்பர் 26,2016

செப்டம்பர் 24,2016