court news | சொத்து குவிப்பு வழக்கு: வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு| Dinamalar

சொத்து குவிப்பு வழக்கு: வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: ""தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், ஏதாவதொரு காரணத்தை சொல்லி, வழக்கை இழுத்தடிக்கின்றனர்,'' என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சவுட்டா குறை கூறினார். சசிகலா வராததால், வழக்கு ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


பெங்களூருவில் நடந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிடம் வாக்கு மூலம் பெறும் நிலையில், வழக்கு உள்ளது. இந்த வழக்கு, நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. "சசிகலாவுக்கு கண் ஆபரேஷன் செய்யப்பட்டு, டாக்டர்களின் அறிவுரைப்படி, ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும், தொடர்ந்து 10 நாட்களுக்கு, கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். "அவர், வெளியூர் பயணம் செல்லக் கூடாது. அதிக சிரமம் எடுத்து கொள்ளக் கூடாது' என்று, டாக்டர் கண்டிப்புடன் கூறியுள்ளார் என்று, டாக்டர் கொடுத்த சான்றிதழையும் நீதிபதியிடம் கொடுத்து, வழக்கை விசாரிக்க, மேலும் 10 நாள் அவகாசம் வேண்டும்' என்று, சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கேட்டுக் கொண்டார். பயங்கர முதுகு வலி இருப்பதால், சுதாகரன் வரவில்லை என்றும், "அதிக சுகர்' இருப்பதால், இளவரசி வரவில்லை என்றும், அவர்களின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கூறுகையில், ""இது போன்று, காரணங்களை தொடர்ந்து கூறுவது ஏற்புடையதல்ல. அடுத்த விசாரணைக்கு, குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகுமாறு, அவர்களின் வழக்கறிஞர்கள் தெரியப்படுத்த வேண்டும். அடுத்தகட்ட விசாரணையை, ஜூன் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்,'' என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KAARTHI - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-201202:12:02 IST Report Abuse
KAARTHI வரும் 25 லும் இவர்கள் வரமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-201202:10:31 IST Report Abuse
KAARTHI நீ அடிக்கிறமாதிரி அடி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை