court news | தமிழக கவர்னருக்கு ஆந்திர கோர்ட் சம்மன்| Dinamalar

தமிழக கவர்னருக்கு ஆந்திர கோர்ட் சம்மன்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக கவர்னருக்கு ஆந்திர கோர்ட் சம்மன்

ஐதராபாத்: ஆந்திராவில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகும்படி, தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு, ஆந்திர மாநில ஊழல் தடுப்பு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.


ஆந்திராவைச் சேர்ந்த மோகன் லால் என்பவர், ஐதராபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "ரோசய்யா, ஆந்திர முதல்வராக இருந்த போது, கடந்த 2010ல், ஐதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு சொந்தமான 9.14 ஏக்கர் நிலம், தனியாருக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக, அரசு கருவூலத்துக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இதுகுறித்து ஆந்திர மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "இந்த வழக்கில் ரோசய்யாவுக்கு எதிராக, எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை முடிக்க வேண்டும்' என, அறிக்கை அளித்தனர். ஆனால், இந்த அறிக்கையை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி, ரோசய்யாவுக்கு சம்மன் அனுப்புவதற்கு, கோர்ட் நேற்று உத்தரவிட்டது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை