sambavam news | அசாமில் கடும் வெள்ள பெருக்கு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு| Dinamalar
Advertisement
அசாமில் கடும் வெள்ள பெருக்கு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பூடானில் இருந்து பாயும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக, அசாம் மாநிலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


பூடான் நாட்டிலிருந்து, சன்கோஷ், மனாஸ், ஜல்தகா, டொர்சா, வான்சூ, கவுராங், பெகி மற்றும் தன்ஸ்ரீ ஆகிய நதிகளின் நீர், இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த ஆறுகளில் சிலவற்றின் குறுக்கே, பூடான் அரசு, அணைகளை கட்டியுள்ளது. ஆறுகளில் பாயும் நீரைக்கொண்டு, ஏராளமான நீர் மின் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள அணைகளில் இருந்து, முன் அறிவிப்பு இன்றி, திடீரென தண்ணீரை திறந்து விடுவதை, பூடான் அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இதனால், இந்த ஆறுகள் பாயும், அசாமின் நல்பாரி, பர்பேடா ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அசாம் மட்டுமல்லாமல், பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் அணையாலும், அசாமுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


வெள்ள பெருக்கு: இந்நிலையில், இந்த ஆண்டும், அசாமில் பாயும் அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து, நல்பரி, பர்பேடா ஆகிய மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான கிராமங்கள், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் உடமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ளும்படி, அசாம் மாநில விவசாய துறை அமைச்சர் நிலோமனி சென் டேகாவுக்கு, முதல்வர் தருண் கோகோய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சர் நிலோனி டேகாவும், உயரதிகாரிகளும் வெள்ளப் பாதிப்பு பகுதிக்கு சென்று, மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.


நான்கு பேர் பலி: பர்பேடா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் நேற்று, ஒரு குழந்தை உட்பட நான்கு பேர், வெள்ள நீரில் மூழ்கினர். இதையடுத்து, இந்த வாரத்தில் வெள்ளப் பெருக்கால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.


அமைச்சர் நிலோமனி சென் டேகா அளித்த பேட்டி: நல்பாரி, பர்பேடா ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலவரம் மிக மோசமாக உள்ளது. ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள், ஓரிடத்தில் இருந்து, மற்ற இடத்துக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதுவரை, இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும், 57க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், மக்களின் உடமைகள் மட்டுமல்லாமல், ஏராளமான விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.


ஆலோசனை கூட்டம்: வெள்ளப் பெருக்கால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது மதிப்பிட முடியாது. வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்காக, உயரதிகாரிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் விரைவில் கூட்டப்படவுள்ளது. மக்களுக்கு தேவையான, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அளிப்பதற்காக, அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிலோமனி சென் டேகா கூறினார். இதற்கிடையே, அனைத்து ஆறுகளிலுமே நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக, பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.


முன்னேற்றமில்லை: கடந்த காலங்களில் அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, அசாம் முதல்வர் தருண் கோகோய், இந்த விவகாரத்தை, பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆறுகளின் நீரோட்டத்தை முறையாக கண்காணித்து, அதுகுறித்த தகவல்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, பூடான் அரசுக்கு வலியுறுத்தும்படி, தருண் கோகோய் கேட்டுக் கொண்டார். மேலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால், அதுகுறித்து முன்னதாகவே எச்சரிக்கை செய்யும்படியும் பூடானை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனாலும், இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த ஆண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


- நமது கவுகாத்தி நிருபர் -


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்