pothu news | நீக்கப்பட்ட பைலட்டுகளை சேர்க்க தயார்: அஜித் சிங்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீக்கப்பட்ட பைலட்டுகளை சேர்க்க தயார்: அஜித் சிங்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீக்கப்பட்ட பைலட்டுகளை சேர்க்க தயார்: அஜித் சிங்

மும்பை: ""போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா பைலட்டுகள், நிபந்தனையின்றி போராட்டத்தை கைவிட்டு, வேலைக்கு திரும்பினால், பணி நீக்கம் செய்யப்பட்ட பைலட்டுகளை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளத் தயார்,'' என, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார்.


ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளில், இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 45 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என, டில்லி உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தின் அங்கீகாரத்தை, ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது. அத்துடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 400க்கும் மேற்பட்ட பைலட்டுகளில் 101 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் கூறியதாவது: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் நிபந்தனையின்றி, தங்களின் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினால், பணி நீக்கம் செய்யப்பட்ட பைலட்டுகளை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளத் தயார். புதிதாக பைலட்டுகளை பணிக்கு சேர்ப்பது தொடர்பாக, ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்யும். இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால், தங்களுக்கு பணி நெருக்கடி அதிகரித்துள்ளதாக, ஏர் இந்தியா எக்சிகியூடிவ் பைலட்டுகள் எனக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை. சில பைலட்டுகள் கையெழுத்திடாமல் எழுதிய கடிதம் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் அஜித் சிங் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை