district news | சுகாதார நிலையத்தில் காட்சி பொருளாக சித்தா யுனானி வார்டு: திறப்பு எப்போது? | Dinamalar

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தில் காட்சி பொருளாக சித்தா யுனானி வார்டு: திறப்பு எப்போது?

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ராமப்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்தா, யூனானி வார்டு வெறும் காட்சி பொருளாக உள்ளது.

பொள்ளாச்சி அடுத்த ராமப்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தகம், டாக்டர் அறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன. கிராமப்புற மக்கள் மற்றும் வயதானவர்களுக்கு பெரிதும் பயன்படும் விதத்தில் சுகாதார நிலையத்தில் சித்தா, யூனானி வார்டு கடந்த ஜூலை 2010ம் ஆண்டு முதல் வார்டு வந்தது. கடந்த 2011ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், ஒன்பது லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு எந்தவித பயனும் இன்றி காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கடந்த ஜூலை 2010ம் ஆண்டு முதல் ராமப்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா, யூனானி வார்டு கட்டும் பணிகள் நடந்தன. இந்த வார்டு கட்ட தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 9.56 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை