arasiyal news | மின் பற்றாக்குறையால் இரவு 7 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவா? உ.பி., அரசு மறுப்பு| Dinamalar

மின் பற்றாக்குறையால் இரவு 7 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவா? உ.பி., அரசு மறுப்பு

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மின் பற்றாக்குறையால் இரவு 7 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவா? உ.பி., அரசு மறுப்பு

லக்னோ: "மின் பற்றாக்குறை காரணமாக, அனைத்து கடைகளையும், காலை 11 மணிக்கு திறந்து, மாலை 7 மணிக்கு மூடி விட வேண்டும்' என்ற, உ.பி., மாநில அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, "அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாலை 7 மணிக்கு பின், மின்சாரம் வினியோகிக்க முடியாது என்று தான் அறிவித்திருந்தோம்' என, மாநில அரசு பல்டி அடித்துள்ளது.


உ.பி.,யில் கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதை அடுத்து, அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சகம் சார்பில் நேற்று முன்தினம் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், "மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் உட்பட, அனைத்து வர்த்தக நிறுவனங்களையும், காலை 11 மணிக்கு தான் திறக்க வேண்டும். அதேபோல், மாலை 7 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூடி விட வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும். மருந்து கடைகளுக்கு மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


சட்டசபையில் வெளிநடப்பு: உ.பி., மாநில சட்டசபையில் நேற்று இந்த விவகாரம் எதிரொலித்தது. பா.ஜ., உறுப்பினர் சதீஷ் மகனா இந்த பிரச்னையை கிளப்பினார். அவர் பேசுகையில், "மாநில அரசின் இந்த உத்தரவால், ஏராளமான மக்கள், உ.பி.,யை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் ஆஜம் கான் அளித்த பதில் திருப்தி அளிக்காததை அடுத்து, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும், அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அரசு பல்டி: இதையடுத்து, நேற்று மாலை, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட விஷயத்தை தவறாக புரிந்து கொண்டு, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடைகளைத் திறப்பது மற்றும் மூடுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாலை 7 மணிக்கு மேல், மின்சாரம் வினியோகிக்க முடியாது என்று தான் கூறினோம். மாலை 7 மணிக்கு பின், கடைகளை மூடுவதும், திறந்து வைப்பதும், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களை பொறுத்தது. மாநிலத்தில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. முந்தைய பகுஜன் சமாஜ் அரசு, மின்சார உற்பத்திக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான், இதற்கு காரணம். சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களை, அதற்கு பின் வந்த பகுஜன் சமாஜ் அரசு செயல்படுத்தியிருந்தால், தற்போது மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கிடைத்திருக்கும். இவ்வாறு ஷிவ்பால் யாதவ் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani natraj - Troy,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201200:01:31 IST Report Abuse
mani natraj மூக்கு இப்படி பொடப்பா இருந்தா இப்பிடி தான் பேச சொல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை