sambavam news | மகளை பாலியல் பலாத்காரம் செய்த தூதரக அதிகாரி விரைவில் கைது?| Dinamalar

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தூதரக அதிகாரி விரைவில் கைது?

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தூதரக அதிகாரி விரைவில் கைது?

பெங்களூரு: மூன்றரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த, பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க, பிரான்ஸ் நாடு ஒப்புதல் அளித்துள்ளது.


தன் மூன்றரை வயது மகளை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெங்களூரு வசந்த் நகரிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில், உதவி மேலதிகாரியாக பணியாற்றி வந்த பாஸ்கல் மீது, அவரின் மனைவி சுஜா, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில், புகார் செய்திருந்தார். இப்புகார் மீது நடவடிக்கை எடுப்பதில், சட்டச் சிக்கல் இருப்பதாகக் கூறி, கர்நாடக போலீசார் திணறினர். இவ்விவகாரம், இரு நாடுகளுக்கு உட்பட்டது என்பதால், பாஸ்கலை கைது செய்ய முடியாமல், போலீசார் தவித்தனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து விளக்கமளித்து, மேல் நடவடிக்கைக்கு அனுமதிக்குமாறு, கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, பாஸ்கல் தவறு செய்திருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு, எங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை என்று, பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டு விட்டது. பிரான்ஸ் நாட்டின் அனுமதி கிடைத்ததையடுத்து, பாஸ்கல் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மூன்றரை வயது மகளை கற்பழித்த, பிரான்ஸ் தூதரக உதவி மேலதிகாரி பாஸ்கலை கைது செய்ய வலியுறுத்தி, வசந்த் நகரிலுள்ள பிரான்ஸ் தூதரக அலுவலகம் முன், ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பாஸ்கலை கைது செய்' என்ற பேனருடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம், ஹைகிரவுண்ட் போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவர்களை சமாதானப்படுத்தினர். சமூக சேவகரும், வழக்கறிஞருமான பிரமிளா நேசர்கீ கூறுகையில், ""போலீசாரின் தாமதம் கவலையளிக்கிறது. விரைவில், பாஸ்கலை கைது செய்ய வேண்டும்,'' என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை