pothu news | பி.சி.சி.ஐ., ஸ்ரீனிவாசனிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.சி.சி.ஐ., ஸ்ரீனிவாசனிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பி.சி.சி.ஐ., ஸ்ரீனிவாசனிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

ஐதராபாத்: ஆந்திராவில், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன், சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகனுக்கு சொந்தமான நிறுவனங்களில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குனருமான என்.ஸ்ரீனிவாசனிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, அவரையும், வேறு பல சிமென்ட் கம்பெனிகளின் அதிகாரிகளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஐதராபாத்தில் தில்க்ஷா விருந்தினர் மாளிகையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்துக்கு, ஸ்ரீனிவாசன் நேற்று வந்தார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராகப் பதவி வகித்த போது, சிமென்ட் கம்பெனிகளுக்கு தண்ணீர் மற்றும் சுண்ணாம்பு கற்கள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடைபெற்றதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை