தியாகதுருகம் : "தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை துவங்கும் இடங்களில், எச்சரிக்கை, "ரிப்ளக்டர் ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்ட, இரும்பு தகடுகளைப் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் இருந்து, சேலம் வரையில், நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உளுந்தூர் பேட்டையில் இருந்து, ஆத்தூர் அடுத்த காட்டுக்கோட்டை வரை, பணிகள் முடிக்கப்பட்டு, போக்குவரத்து நடந்து வருகிறது. தியாகதுருகம் புறவழிச் சாலை துவங்கும் இடத்தில், போதிய எச்சரிக்கை பலகைகள், விளக்கு வெளிச்சம் இன்றி, பாதுகாப்பு கேள்விக் குறியாக இருந்தது. இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். தியாகதுருகம் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் உள்ள, சென்டர் மீடியன் தடுப்புகளுக்கு நடுவில், "ரிப்ளக்டர்'கள் பதிக்கப்பட்ட, இரும்பு தகடுகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. புறவழிச்சாலை முடியும், பிரிதிவிமங்கலம் ஏரிக்கரை அருகில், ஹைமாஸ் விளக்கு அமைத்து, போதிய வெளிச்சம் கிடைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.