sambavam news | குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்: மண்வெட்டி உதவியுடன் அகற்றிய நீதிபதி| Dinamalar

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்: மண்வெட்டி உதவியுடன் அகற்றிய நீதிபதி

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்: மண்வெட்டி உதவியுடன் அகற்றிய நீதிபதி

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில், மழையால் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட சேறு, சகதியை, மண்வெட்டி உதவியுடன், உயர் நீதிமன்ற நீதிபதி அகற்றியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர், தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன். கொச்சியில், இவர் வசிக்கும் கீர்த்தி நகர் குடியிருப்பு பகுதியில், சேறு, சகதி அடைத்ததால், மழை நீர் வெளியேறாமல் தேங்கியது. மழை நீர் வெளியேற முடியாத அளவுக்கு, அடைப்பு இருப்பது குறித்து, கொச்சி மாநகராட்சிக்குத் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், குடியிருப்பில் உள்ள சாலையில், மழை நீர் பெருமளவு தேங்கி இருந்தது. குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதைப் பார்த்த நீதிபதி ராதாகிருஷ்ணன், தானே களத்தில் இறங்கினார். மழை நீர் வெளியேறாமல் இருப்பதற்கு காரணமான, புதர்கள், செடிகள், சேறு மற்றும் சகதியை, மண்வெட்டி உதவியுடன் அகற்றினார். நேற்று முன்தினம் இரவு, பலத்த மழையில் இதைச் செய்தார். கால் சட்டை மற்றும் பனியன் அணிந்து, அரை மணி நேரத்திற்கு மேலாக, இந்தப் பணியில் ஈடுபட்டார். இதை, கீர்த்தி நகர் குடியிருப்புவாசிகள் அனைவரும், வியப்புடன் பார்த்தனர். சேறு, சகதிகளை உயர் நீதிமன்ற நீதிபதியே அகற்றிய தகவல், நேற்று காலை, கொச்சி மாநகராட்சிக்கு கிடைத்ததும், அவர்கள் விரைந்து வந்து, அந்தச் சாலை முழுவதும் சுத்தம் செய்து, தண்ணீர் தடையின்றி வெளியேற ஏற்பாடு செய்தனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை