fees to be raised : says advocates | கட்டணத்தை உயர்த்த அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை : முதல்வருக்கு மனு அனுப்பினர் | Dinamalar
Advertisement
கட்டணத்தை உயர்த்த அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை : முதல்வருக்கு மனு அனுப்பினர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

இரு ஆண்டுகளுக்கு முன் மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, உயர்த்தி வழங்க வேண்டும் என, அரசு வழக்கறிஞர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், அரசு பிளீடர் என்ற நிலையில், அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு பிளீடர்கள் 17, கூடுதல் அரசு பிளீடர்கள் 24, அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) 33, மதுரை ஐகோர்ட் கிளையில் சிறப்பு அரசு பிளீடர்கள் 7, கூடுதல் அரசு பிளீடர்கள் 10, அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) 11 என, பணியாற்றி வருகின்றனர். 2010ல் மாற்றியமைப்பு அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம், நவ., 2010ல் மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில், அப்போதைய அட்வகேட் - ஜெனரலின் பரிந்துரையை, அரசின் உயர்மட்டக் குழு விவாதித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரையை, அரசு ஏற்று, அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அட்வகேட் - ஜெனரலுக்கு, 23 ஆயிரம் ரூபாய்; கூடுதல் அட்வகேட் - ஜெனரலுக்கு, 20 ஆயிரம்; அரசு பிளீடருக்கு, 15 ஆயிரம்; சிறப்பு அரசு பிளீடருக்கு, 12 ஆயிரம்; கூடுதல் அரசு பிளீடருக்கு, 10 ஆயிரம்; அரசு வழக்கறிஞர் (சிவில்), 7,500; அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு, 15 ஆயிரம்; கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு, 12 ஆயிரம்; அரசு வழக்கறிஞர் (கிரிமினல்), 10 ஆயிரம் ரூபாய் என, மாதக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது.
இதுதவிர, மொபைல் கட்டணமாக, 1,000 ரூபாய், போக்குவரத்துக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், மனு விசாரணைக்கு வரும் கட்டத்தில் ஆஜராவதற்கும், பதில் மனு தயாரிக்கவும், வழக்கு பைசல் ஆவதற்கும் தனியாக கட்டணம் வழங்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு என்ன? தங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியே கட்டணம் என இல்லாமல், ஒரே கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என, அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். அரசு வழக்கறிஞருக்கு (சிவில்), 50 ஆயிரம்; கூடுதல் அரசு பிளீடருக்கு, 75 ஆயிரம்; சிறப்பு அரசு பிளீடருக்கு ஒரு லட்சம்; அரசு பிளீடருக்கு, 1.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணம் போதுமானதாக இல்லை என்றும்; அலுவலக உதவியாளருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவானது என்றும்; அரசு வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
பணியில் முழு கவனமும் செலுத்த வேண்டி இருப்பதாலும், தனிப்பட்ட வழக்குகளில் கவனம் செலுத்தாமல் போவதால், கட்சிக்காரர்களை இழக்கும் நிலை ஏற்படுவதாலும், அதை ஈடுகட்டும் வகையில், ஓரளவுக்கு கட்டணம் நிர்ணயிப்பதே நியாயமாக இருக்கும் என்பதே, அரசு வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்பு.

- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்