arasiyal news | அன்னா ஹசாரே அணி மீது பாரதிய ஜனதா பாய்ச்சல்| Dinamalar

அன்னா ஹசாரே அணி மீது பாரதிய ஜனதா பாய்ச்சல்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அன்னா ஹசாரே அணி மீது பாரதிய ஜனதா பாய்ச்சல்

புதுடில்லி: ""அரசியல் சட்டத்திற்கு மேலான அதிகாரம் கொண்ட அமைப்பு போல, அன்னா ஹசாரே அணியினர் செயல்படக்கூடாது,'' என, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.


"உயரிய அரசியல் சட்ட பதவியான ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஜனாதிபதி என்ற பெரிய பதவியை அலங்கரிக்கப் போகும் நபர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு எதிரான ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்' என, நேற்று முன்தினம் அன்னா ஹசாரே அணியினர் கூறியிருந்தனர். இதற்கு, பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் முன், தங்களிடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என, கட்டாயப்படுத்தும் வகையில் அன்னா ஹசாரே அணியினர் பேசி வருகின்றனர். அரசியல் சட்டத்திற்கு மேலான அதிகாரம் கொண்ட அமைப்பு போல யாரும் செயல்பட முற்படக்கூடாது. பிரணாப் முகர்ஜி தொடர்பாக, அன்னா ஹசாரே அணியினர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் துரதிருஷ்டவசமானவை. ஒருவர் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க, சட்டங்கள் உள்ளன. அரசியல் சட்ட ரீதியான அமைப்பு முறைகள் உள்ளன. யாராவது தவறு செய்திருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும். தேர்தலில் போட்டியிடும் முன், சிவில் சமூகத்தினரிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பதெல்லாம், நடக்காத காரியம். தேர்தலில் போட்டியிடுவோர், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தங்களது சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உட்பட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்கின்றனர். அவற்றை அரசின் பல்வேறு துறைகளும் ஆய்வு செய்கின்றன. அவர் தெரிவித்துள்ள தகவல்களில் ஏதாவது தவறுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையினர் பார்த்துக் கொள்வர். அவர்கள் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை