arasiyal news | "அப்துல் கலாம் அறிவிப்பு வேதனை அளிக்கிறது': மம்தா பானர்ஜி| Dinamalar

"அப்துல் கலாம் அறிவிப்பு வேதனை அளிக்கிறது': மம்தா பானர்ஜி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
"அப்துல் கலாம் அறிவிப்பு வேதனை அளிக்கிறது': மம்தா பானர்ஜி

கோல்கட்டா: ""ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, அப்துல் கலாம் அறிவித்தது எனக்கு மன வேதனை அளிக்கிறது. மக்களின் ஜனாதிபதி கலாம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேஸ்புக் இணையதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற கலாமின் அறிக்கையைப் பார்த்தேன். அது எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. கலாம் மக்களின் ஜனாதிபதி. ஜனாதிபதி அலுவலகத்திற்கும், மக்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்பியவர் கலாம். யாரும் சந்தேகிக்க முடியாத நேர்மை மற்றும் உயரிய நற்பண்பு கொண்ட, நாட்டிலுள்ள இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் கலாம், ஜனாதிபதியாக வேண்டும் என, மக்கள் விடுத்த அழைப்பை, சில அரசியல் கட்சிகள் நிராகரித்து விட்டன. சுய ஆதாயம் தேடும் சில அரசியல்வாதிகள், அனைத்து மரபுகளை மீறி இந்த விஷயத்தில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மக்களின் விருப்பங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டுள்ளனர். நமது மிகப்பெரிய நாட்டின் அரசியல், இருள் சூழ்ந்ததாக உள்ளது. பண பலம் மற்றும் மோசடிகள் மூலம் பொதுநலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் அசைக்க முடியாத விருப்பத்தின் மீது, நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கை இந்திய அரசியலை சுத்தப்படுத்தும். நேர்மை மற்றும் நல்ல நெறிமுறைகளை மீண்டும் கொண்டு வரும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


வெளியேற தயார்: இதற்கிடையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து வெளியேற, திரிணமுல் காங்கிரஸ் மனதளவில் தயாராகிவிட்டது' என, அந்தக் கட்சியின் எம்.பி.,யான சுதீப் பந்தோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: எங்களை ஒரு சுமையாக காங்கிரஸ் நினைத்தால், எங்கள் கட்சி அமைச்சர்கள் மத்திய அரசிலிருந்து விலகத் தயார். மம்தா விலகும்படி கேட்டுக் கொண்டால், உடன் விலகி விடுவோம். அதே நேரத்தில், எங்களுக்கு மறைமுகமாக எந்த அச்சுறுத்தலும் கொடுக்கக் கூடாது. நாங்களாக மத்திய அரசிலிருந்து வெளியேறினால், அரசை கவிழ்க்க முற்படுவதாக மக்களுக்கு தவறான செய்தி சென்று விடும். எங்கள் கட்சி அமைச்சர்கள் யாரும் மம்தாவிடம் ராஜினாமா கடிதங்களை கொடுக்கவில்லை; அரசை பலவீனப்படுத்த விரும்பவில்லை என, மம்தா ஏற்கனவே கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
19-ஜூன்-201207:10:42 IST Report Abuse
ஆரூர் ரங முதன்முதலாக ஆபாசப் பேச்சு, அசிங்க மிரட்டல் மூலம் ஒரு நல்லவரை நிற்கவிடாமல் சதி நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டாவது நியாயமான தீர்ப்புக்களை சரியான நேரத்தில் வழங்கினால்தான் சற்று நிதானம் ஏற்படும் தன்மானம் =ஆர்ப்பவன் நாட்டின் மானம் காக்கமுடியாது. கலாம் அவர்களும் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து , போட்டியிடவேண்டும் நல்லது செய்பவர் மட்டும் நல்லவர்களல்ல. தீமைகளை எதிர்ப்பதும்தான் அச்சம் என்பது மடமை
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-ஜூன்-201206:37:38 IST Report Abuse
Ramasami Venkatesan இப்போது ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை. கலாம் இவ்வளவு எதிர்ப்புகளுடனும் ஒற்றுமை இல்லாமையும் தான் ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்துதான் இந்த முடிவு. இவர் எண்ணம் முன்பே தெரிந்திருக்கும். சென்ற முறை அப்துல் கலாம் பெயரை மொழிந்தவரே இம்முறை சொல்லவில்லை என்றால். எதிர் கட்சியினர் எல்லோரும் கை கோர்த்து ஒன்று பட்டு ஒருவரை ஏகமனதாக தேர்ந்தெடுத்தால் காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடிக்கலாம். இது ஒன்றும் முடியாத ஒன்று இல்லை. காங்கிரேசை தோற்கடிக்கும் வேகமும் திட எண்ணமும் இருந்தால் போதுமானது. இது காங்கிரசுக்கு தோல்வியாக அமைந்தால் - அந்த கட்சிக்கு அவமானம் - கட்சி ப்ரெசிடென்ட் க்கும். செய்து காட்டுவார்களா எதிர் கட்சியினர்.
Rate this:
Share this comment
Cancel
Dr.Sivaprakasam Thamizhmanii - CHENNAI ,இந்தியா
19-ஜூன்-201206:04:46 IST Report Abuse
Dr.Sivaprakasam Thamizhmanii இந்த இரண்டு மாநிலங்களில் வழிநடத்தும் இரண்டு பெண்களும் தன புத்தி பின் புத்தி என்று காட்டி விட்டார்கள். அரை வேக்காட்டு தனம் தெரிந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.