pothu news | பெட்ரோல் விலை குறையுமா? எண்ணெய் நிறுவனங்கள் புதுமுடிவு| Dinamalar
Advertisement
பெட்ரோல் விலை குறையுமா? எண்ணெய் நிறுவனங்கள் புதுமுடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "பெட்ரோல் விலையில், இன்னும் சில நாட்களுக்கு மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதத்துக்கு இரண்டு முறை, பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பது குறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால், இம்மாதம் 15ம் தேதியிலிருந்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு, ரூ.1.60 குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து, பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை இன்னும் சில நாட்களுக்கு மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரீசில் தேர்தல் நடந்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் நிலவரத்தையும், கச்சா எண்ணெயின் விலையையும், தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். இதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையில் மாற்றம் செய்வது குறித்த முடிவு இன்னும் சில நாட்களுக்கு பின் எடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்